நாடாளுமன்ற முற்றுகையை விளக்கி புதுச்சேரியில் சிஐடியு பிரச்சாரம்
yesterday
<p><strong>நாடாளுமன்ற முற்றுகையை விளக்கி புதுச்சேரியில் சிஐடியு பிரச்சாரம்</strong></p><p>புதுச்சேரி, நவ.17-தொழிலாளர் உரிமைகளை பறித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து டிசம்பர் மாதம் 1,2 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை சிஐடியு சார்பில் முற்றுகையிடும் போராட்டத்தை விளக்கி புதுச்சேரி முழுவதும் இப்பிரச்சாம் நடைபெற்று வருகிறது.</p><p>புதுச்சேரி முதலியார் பேட்டை வானொலி திடல் எதிரில் துவங்கிய தெருமுனைப் பிரச்சாரத்திற்கு, சிஐடியு புதுச்சேரி மாநில தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில செயலாளர் சீனுவாசன், நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், மதிவாணன், விஜயகுமார் பங்கேற்று பிரச்சாரத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினர். முன்னதாக முதலியார் பேட்டையில் துவங்கிய வாகன பிரச்சாரம் அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், மதகடிப்பட்டு, வில்லியனூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.</p>
