தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர்களை அடிமையாக்கும் 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெறக் கோரி மாவட்டங்களில் சிஐடியு மறியல் போர்

23 Dec 2025, 4:05 pm
தொழிலாளர்களை அடிமையாக்கும் 4 சட்ட தொகுப்புகளை  திரும்ப பெறக் கோரி மாவட்டங்களில் சிஐடியு மறியல் போர்
<p><strong>தொழிலாளர்களை அடிமையாக்கும் 4 சட்ட தொகுப்புகளை &nbsp;திரும்ப பெறக் கோரி மாவட்டங்களில் சிஐடியு மறியல் போர்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, டிச.23- &nbsp;ஒன்றிய அரசின் தவறான சட்ட திருத்தத்தினால் தொழிலாளர்களை அடிமையாக்கும் 4 சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சமூக சட்ட பாதுகாப்பு உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, சிஐடியூ சார்பில், செவ்வாயன்று மாநிலம் தழுவிய பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி திருச்சி மாவட்ட சிஐடியு சார்பில், சிங்காரத்தோப்பு பூம்புகாரில் இருந்து பேரணி துவங்கி நடைபெற்றது, &nbsp;பேரணியை, சிஐடியு மாநிலச் செயலாளர் தேவமணி துவக்கி வைத்தார். சிஐடியு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் செல்வி, புறநகர் மாவட்டச் செயலாளர் சம்பத், மாநகர் மாவட்டத் தலைவர் மணிமாறன், மாவட்டப் பொருளாளர் மணிகண்டன், பிஎச்இஎஸ், சிஐடியு சங்க பொதுச்செயலாளர் பரமசிவம், உள்ளாட்சி சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் பேசினர். &nbsp;பின்னர் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. கும்பகோணம் &nbsp;கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. &nbsp;போராட்டத்திற்கு சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன், ஆட்டோ சங்கம் மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், கௌரவத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் ஆர். சங்கர், நெசவு தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் என். பி. நாகேந்திரன், பொறுப்பாளர்கள் சுப்புராமன், கே.ஆர்.சந்திரன், அரசு போக்குவரத்து தொழிலாளர் ஓய்வு பெற்றோர் சங்க பொறுப்பாளர் தாமோதரன், மாதர் சங்க நகரச் செயலாளர் சுமதி, அங்கன்வாடி தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் ஜெயதூபி, உமா மகேஸ்வரி உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஈடுபட்டனர். &nbsp;பெரம்பலூர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. &nbsp;இதில் ஆட்டோ சங்கம் மாவட்டச் செயலாளர் ரெங்கநாதன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் குணசேகரன், கட்டுமான சங்கம் மாவட்டச் செயலா ளர் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் கருணாநிதி, சாலையோர சங்க மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் சுரேஷ், மக்களை தேடி மருத்துவ சங்க மாநில இணைச்செயலாளர் செல்வி ஆகி யோர் கலந்து கொண்டனர். &nbsp;அரியலூர் &nbsp;அரியலூர் அண்ணா சிலை அருகில் நடந்த மறியல் போராட்டம் சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.சிவாஜி தலைமை உரையாற்றினார். தொழிற்சங்க நிர்வாகிகள் வி.வீரப்பன், ஆர்.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி. துரைசாமி, ஆர். சிற்றம்பலம், பி. அழகுதுரை, எஸ்.மெய்யப்பன், ஏ.சத்தியமூர்த்தி, வி. ராஜாமணி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். &nbsp;திருவாரூர் திருவாரூர் தலைமை தபால் நிலையம் ஏதிரே, சிஐடியு மாவட்டக் குழு சார்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது. ரயில் நிலையம் அருகே இருந்து, இந்திய தொழிற்சங்க மையத்தின் தொழிலாளர் பேரணி துவங்கி, பேருந்து நிலையம் கடந்து தலைமை தபால் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத் தலைவர் சி. ஜெயபால் தலைமை வகித்தார்.மாநிலக்குழு உறுப்பினர் இரா. மாலதி முன்னிலை வகித்தார். &nbsp;மாவட்டச் செயலளார் எம்.கே.என். அனிபா, மாவட்டத் தலைவர் கே.பி. ஜோதிபாசு, மாவட்டப் பெரு ளாளர் கே. கஜேந்திரன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர்கள் டி.வீரபாண்டியன், வி. தவமணி, அ. பிரேமா, யு. ராமச்சந்திரன், பி.என். லெனின் மற்றும் தோழமை சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். &nbsp;நாகப்பட்டினம் நாகப்பட்டினம் தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில், சிவன் அருள்செல்வன் தலைமையில், மாவட்டப் பொருளாளர் வெற்றிவேல், கட்டுமான சங்கத் தலைவர் பகு, ஊட்டச்சத்து ஊழியர் சங்க தலைவர் கவிதா, போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் ஆர். சரவணன், மக்களைத் தேடி மருத்துவ சங்க தலைவர் வனிதா, தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் கலைச்செல்வி, சாலை போக்குவரத்து சங்க தலைவர்கள் ரவி, பக்கிரிசாமி மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் மறியலில் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன் நிறைவுரையாற்றினார். புதுக்கோட்டை &nbsp;புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக &nbsp;நடைபெற்ற மறியல் &nbsp;போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் மாவட்டப் பொரு ளாளர் சி. மாரிக்கண்ணு, துணைத் &nbsp;தலைவர்கள் ஆர். மணி மாறன், கே. நடராஜன், ஏ.ஆர். பால சுப்பிரமணியன், டி. தங்கராஜ், ஆர். வீராச்சாமி, துணைச் செயலாளர்கள் வி. சரவணன், டி. பாவேல்குமார், கே. &nbsp;கார்த்திகேயன், கே.லதா, கே. விஜய லெட்சுமி, என்.ராஜா, ஏ.முகமதுகனி, மாநகர ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ. ரகு மான் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். &nbsp;மயிலாடுதுறை மயிலாடுதுறையில் தொழிற்சங்க மையம் சார்பில் சாலை மறியல் போராட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. &nbsp;மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.மாரியப்பன் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆர். ராமானுஜம், ஐசிடிசி மாவட்டச் செயலாளர் சி.லதா, மாவட்டச் செயலாளர் எம்.சேகர் (உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம்), மாவட்டச் செயலாளர் எம்.சரளா (மக்களை தேடி மருத்துவம்) உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். &nbsp;சிஐடியு மாநில தலைவர் பி.கருப்பையா மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கரூர் சிஐடியு கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா காமராஜர் சிலை முன்பு, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு மாநில செயலாளர் கே&zwnj;.சி. கோபிகுமார் தலைமை வகித்தார். &nbsp;சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. ஜீவானந்தம் மறியல் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, போராட்டத்தை வாழ்த்தி பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் சி.ஆர். ராஜா முகமது, மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிர மணியன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாவட்டப் பொருளாளர் என். சாந்தி நன்றி கூறினார். &nbsp;இதில் பங்கேற்ற பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.