முந்தய பக்கம்

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

12 Dec 2025, 3:12 pm
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
<p>கோவை, டிச.12- ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி கோவையில் சிஐடியு குடிநீர் &nbsp;வடிகால் வாரிய சங்கத்தின் சார்பில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு, குடிநீர் வாரியத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்குத் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான சட்டப்படியான ஊதியத்தை வங்கிக் கணக்கு மூலம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்குச் சாத கமாகப் பெறப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில், அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு சட்டப் படியான இஎஸ்ஐ மற்றும் பிஎஃப் ஆகிய வற்றை செலுத்த வேண்டும். அரசாணை எண் பி.பி. 505-ஐ (BP 505) முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டத்தொ குப்பை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. &nbsp;கோவை பாரதி பார்க் சாலையில் உள்ள &nbsp;தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு &nbsp;நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோவை, நீல கிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திரளான தொழிலாளர்கள் பங்கேற்ற னர். ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை மண்டல தலைவர் ஏ. பிரான்சிஸ் தலைமை தாங்கினார். இதில், மாநில துணைச் செயலாளர் எஸ். &nbsp;பெலிக்ஸ், மண்டல உதவித் தலைவர் பி.சக்தி வேல் ஆகியோர் உரையாற்றினர். பொதுச் செயலாளர் ஆர்.சரவணன் நிறைவுரையாற் றினார். மண்டல பொருளாளர் எம். சசிகுமார் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram