முந்தய பக்கம்

விசாரணை என்கிற பெயரில் அலைகழிக்காதீர்

24 Sept 2026, 11:48 pm
விசாரணை என்கிற பெயரில் அலைகழிக்காதீர்

விசாரணை என்கிற பெயரில் அலைகழிக்காதீர்

உடுமலை,செப்.24-விசாரணை என்ற பெயரில் தொழிலாளர்களை அலைக்கழிக்கும் அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து, உடுமலை பொது தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் வியாழனன்று உடுமலை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் நலவாரிய உதவித்தொகை உள்ளிட்ட உரிமைகளை பெறுவதற்காக விசாரணை என்ற பெயரில் தொழிலாளர்களை அலைக்கழிக்கும் திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், நலவாரிய உதவித்தொகைகளை பல்வேறு காரணங்களைக் கூறி வழங்காமல் காலதாமதம் செய்வதை கைவிட்டு,தகுதியான தொழிலாளர்களுக்கு உடனடியாக உதவித்தொகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கி.கனகராஜ், நடைபாதை சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பாபு, ஆஜீக்அலி மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் மாலினி மற்றும் திரளான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram