முந்தய பக்கம்

டாஸ்மாக் ஊழியர் சம்மேளன நிர்வாகி பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

24 Jun 2026, 1:50 am
டாஸ்மாக் ஊழியர் சம்மேளன நிர்வாகி பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
<p><strong>டாஸ்மாக் ஊழியர் சம்மேளன நிர்வாகி பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருவள்ளூர், ஜூன் 23- டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசியதற்காக, டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் மாநில உதவி பொதுச் செயலாளர் ஜான் (எ) ராதாகிருஷ்ணனை நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. இந்த ஜனநாயக விரோதச் செயலைக் கண்டித்து, அவரது பணிநீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூன் 23) திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் வி. சந்திரன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே. ராஜேந்திரன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram