முந்தய பக்கம்

ஒப்பந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக சிஐடியு ஆர்ப்பாட்டம்

2 Oct 2026, 1:23 am
ஒப்பந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக  சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக

சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.1 -அக்டோபர் 1ஆம் தேதி ஒப்பந்த தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு, அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, சட்ட சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருப்பூரில் தியாகி குமரன் நினைவகம் முன்பாக வியாழனன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் தலைமை ஏற்றார்.இதில், அனைத்து வகை ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26,000, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர் வாழ்வாதாரம் பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்க திருப்பூர் மண்டல பொதுச்செயலாளர் பி. செல்லதுரை, கட்டுமான தொழிலாளர்கள் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் டி. குமார், சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், உள்ளிட்டோர் உரையாற்றினர். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.உன்னிகிருஷ்ணன், பி.பாலன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram