தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாயுமானவர் திட்ட குறைபாடுகளை களையக்கோரி ஜூன் 30 இல் சிஐடியு கூட்டுறவு சங்கம் ஆர்ப்பாட்டம்

yesterday
தாயுமானவர் திட்ட குறைபாடுகளை களையக்கோரி  ஜூன் 30 இல் சிஐடியு கூட்டுறவு சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>தாயுமானவர் திட்ட குறைபாடுகளை களையக்கோரி ஜூன் 30 இல் சிஐடியு கூட்டுறவு சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருப்பூர், ஜூன் 21- தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வலியுறுத்தி சிஐடியு கூட்டுறவு பணியாளர் சங்கத்தினர் ஜூன் 30 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ள னர். திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியா ளர் சங்கம் (சிஐடியு) மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம், அண்மையில் சிஐடியு திருப்பூர் மாவட்டக்குழு அலுவலகத் தில் மாவட்டத் தலைவர் பி.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், தாயுமானவர் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண் டும். இத்திட்டத்தில் வயது முதிர்ந்தோ ருக்கு ஸ்கேனிங் முறையில் பொருட் கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். குடும்ப அட்டைதாரர்கள் அனை வரும் கைரேகை பதிவு செய்ய, நடை முறை சிக்கல்கள் உள்ளதை களைய வேண்டும். ஐந்து வயதுக்கு மேற்பட் டோர் வயது முதிர்ந்தோருக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு முகாம் ஏற்படுத்தி கைரேகை பதிவு செய்ய வேண்டும், இறந்தவர்கள் பெயரை நீக்கம் செய்ய வேண்டும், வெளி மாநிலங்கள் வெளி நாடுகளில் உள்ளவர்கள் அதிக அள வில் பதிவு செய்யப்படாமல் உள்ளது, அவர்களுக்கு பத்திரிக்கை செய்தி தொலைக்காட்சி வாயிலாக விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும், அதை விடுத்து மேற்கண்ட பிரச்சினைகளுக்கு விற்பனையாளர்களை காரணம் காட்டி அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். மேலும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சில சமூகவிரோதிகள் நியாய விலை கடைகளில் அத்துமீறி வீண் பிரச்சனை களை ஏற்படுத்துவோர் மீது தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும், உடனடி யாக மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், ஜூன் 30 ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப் பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது. இக்கூட்டத்தில், மாவட்டச் செய லாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.