தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

2 Oct 2026, 11:56 pm
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம்  செய்யக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், அக். 2- ஒன்றிய, மாநில அரசுகள் காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங், தினக்கூலி முறையை கைவிட வலி

யுறுத்தி, தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடை

பெற்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு வியா

ழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத் தலைவர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ம.

கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் து.கோவிந்தராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் காரல் மார்க்ஸ், காணிக்கைராஜ், பி.ஜேசுதாஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.

சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. அபிமன்னன், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் சாய் சித்ரா, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஒப்பந்த, தினக்கூலி, அவுட்சோர்சிங் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

திருவாருர்

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே, சிஐடியு திருவாரூர் மாவட்ட மையத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.பி. ஜோதிபாசு தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் எம்.கே.என். அனிபா, மாவட்டப் பொருளாளர் கே. கஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.மாலதி ஆகியோர் உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு இணைப்புச் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்பெரம்பலூர் காந்தி சிலை முன்பு, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட நிர்வாகி கருணாநிதி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் அகஸ்டின், மாவட்ட நிர்வாகி ரெங்கநாதன், பன்னீர்செல்வம், ரெங்கராஜ் ஆகியோர் பேசினர்.மக்களை தேடி மருத்துவ சங்க மாநில துணைச் செயலாளர் செல்வி, ஆட்டோ சங்க மாவட்டப் பொருளாளர் சிவசங்கர்,கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநிலதுணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.