தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தடை செய்யப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதி சிஐடியு போராட்டம் வெற்றி

52 minutes before
தடை செய்யப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதி சிஐடியு போராட்டம் வெற்றி

தடை செய்யப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதி சிஐடியு போராட்டம் வெற்றி

சென்னை, செப். 26 -8வது மண்டலத்தில் பல முக்கிய பகுதி களை வியாபாரம் செய்ய அனுமதிக்கப் பட்ட பகுதிகளாக சென்னை மாநகராட்சி அறி வித்துள்ளது இது சிஐடியு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி 8வது மண்டலத்தில் முக்கிய பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியை தொடர்ந்து சிஐடியு, நகர விற்பனைக்குழு உறுப்பி னர்கள் அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட நிலை யில், பல முக்கியப் பகுதிகள்

சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனு மதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக அதிகாரிகள் மேற்கொண்டு வந்த தடை முயற்சிகளை எதிர்த்து, சாலையோர விற்பனையாளர்கள் மற்றும் சிறு கடை தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் 8வது மண்டல அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம், செப். 18 அன்று தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தப்பட்டு மாநகராட்சிக்கு தொடர் அழுத்தம் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வெள்ளியன்று (செப். 25) நடைபெற்ற 8வது மண்டல நகர விற்பனைக்குழு கூட்டத்தில், எம்.எம்.டி.ஏ. காலனி, அமைந்தகரை புல்லா அவென்யூ, திரு.வி.க. பூங்கா, போகன் வில்லா பூங்கா, டவர் பார்க்,

டி.பி.சத்திரம் பிரதான சாலை, நியூ ஆவடி ரோடு ஆகிய பகுதிகள் வியா

பாரத்திற்கு அனுமதிக்கப் பட்ட பகுதிகளாக அறி

வித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மேலும், அயன்புரம் பாலவாயில் மார்க்கெட் மற்றும் ஆர்ம்ஸ் ரோடு பகுதிகளை மறு ஆய்வு செய்ய மத்திய வட்டார துணை ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். குறிப்பாக, நூறு நாட்க ளுக்கும் மேலாக வருமான மின்றித் தவித்த போகன் வில்லா பூங்கா பகுதி வியா பாரிகளுக்கு இந்த முடிவு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.

இந்த வெற்றிக்கு தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளன மாநிலத் தலைவர் சி.திரு வேட்டை, சென்னை மாநகர சிறுகடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம்.வி.கிருஷ்ணன், சாலையோர விற்பனை யாளர்கள் மற்றும் சிறு கடை தொழிலாளர்கள் சங்க மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ், செயலாளர் பி.சுந்தரம் உள்ளிட்டோர் வழிகாட்டினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.