முந்தய பக்கம்

போராடும் நெசவாளர்களுக்கு ஆதரவு சத்திரப்பட்டியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

7 Oct 2026, 8:52 pm
போராடும் நெசவாளர்களுக்கு ஆதரவு சத்திரப்பட்டியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

போராடும் நெசவாளர்களுக்கு ஆதரவு சத்திரப்பட்டியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம், அக்.7-திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், புனல்வேலி, முத்துச்சாமிபுரம் பகுதிகளில் நெசவாளர்கள் கடந்த 2 மாதங் களாக கூலி உயர்வு, உபரி சேலைகளை அரசு கொள்முதல் செய்தல் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராடும் நெசவாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு சார்பில் இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம், சத்திரப்பட்டி நடுத்தெருவில் புதன்கிழமை ஆதரவு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.சிஐடியு ஒன்றியச் செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர்கள் சம் மேளன மாநிலத் தலைவர் சோமசுந்தரம் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி நிறைவுரையாற்றினார்.

இதில் சம்மேளன மாநிலக் குழு உறுப்பினர் ஜீவானந்தம், அகில இந் திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகி எம்.கே.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் முனியாண்டி, சிஐடியு கன்வீனர் எம்.ஆர்.குருசாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram