தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் விரோத போக்கு புதுச்சேரி எம்ஆர்எப் தொழிற்சாலை முன்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

30 Jun 2026, 12:03 am
தொழிலாளர் விரோத போக்கு  புதுச்சேரி எம்ஆர்எப் தொழிற்சாலை  முன்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்
<p><strong>தொழிலாளர் விரோத போக்கு புதுச்சேரி எம்ஆர்எப் தொழிற்சாலை முன்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்</strong></p><p>புதுச்சேரி, ஜூன் 29 – புதுச்சேரி ஏரிப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் எம்.ஆர்.எப். தொழிற்சாலையின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, சி.ஐ.டி.யு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் இத்தொழிற்சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல், ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்களாகவே நிர்வாகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனை உடனடியாகக் கைவிட வேண்டும். தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதோடு, அவர்களுக்குச் சட்டப்பூர்வமாகக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் ஏரிப்பாக்கம் எம்.ஆர்.எப். தொழிற்சாலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சி.ஐ.டி.யு. புதுச்சேரி மாநிலத் தலைவர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் முருகன், கொளஞ்சியப்பன், ராமசாமி, மதிவாணன், மணிபாலன், ரவிச்சந்திரன், தியாகராஜன் மற்றும் எம்.ஆர்.எப். தொழிற்சாலை சங்க நிர்வாகிகள் சிலம்பரசன், தனசேகரன், பூபாலன், பிரவீன், தர்மசாஸ்தா, விஜயகுமார், வினோத் குமார், பிரகாஷ், நிஜந்தன், சஞ்சய் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர். போராட்டத்தின்போது, தொழிலாளர் நலனில் அக்கறை காட்டாத நிர்வாகத்தைக் கண்டித்தும், புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொழிலாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.