பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துக... அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்காதே! சிஐடியு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
14 Jul 2026, 9:57 pm

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துக... அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்காதே! சிஐடியு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜூலை 14- பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்துதல், அரசு போக்கு வரத்தை தனியார்மயமாக்கக் கூடாது, ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு சார்பில் ஆட்டோ, வேன் மற்றும் அரசு போக்குவரத்து தொழிலாளர் கள் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலை யிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதை கட்டுப்படுத்த வேண்டும், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், அரசு போக்குவரத்து துறையை தனியார்மயமாக்கக் கூடாது, 13 ஆண்டு களாக உயர்த்தப்படாத ஆட்டோ கட்ட ணத்தை உயர்த்த வேண்டும், ஆர்.டி.ஓ. அலு வலகங்களில் வசூலிக்கப்படும் எப்.சி. ஸ்டிக்கர் கட்டணத்தை குறைக்க வேண்டும், ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும், டோல்கேட் கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார் பில் ஆட்டோ, வேன் தொழிலாளர்கள் சங்கம், அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மற்றும் சாலைப் போக்குவரத்து தொழிலா ளர் சங்கம் இணைந்து மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தின.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செல்வக்குமார் தலைமை வகித்தார். விஜி முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா கண்டன உரை யாற்றினார். இதில் சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் எம்.கார்மேகம், நிர்வாகிகள் ஜி. வேலுச்சாமி, பி.ராமர், வி.பாலமுருகன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிவகாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாதவன் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் வி.மகேந்திரகுமார் முன்னிலை வகித்தார். வட்டாரத் தலைவர் ஆர்.சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். சிஐ டியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி கண்டன உரையாற்றினார். மாநகர் கன்வீ னர் பி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சாலைப் போக்குவரத்து தொழிலா ளர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே. விஜயகுமார் தலைமை வகித்தார். டாக்சி ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் புஷ்பராஜ், ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் மாரிக் கண்ணு, அரசு போக்குவரத்து கழக சங்கத் தலைவர் பாலசுப்பு ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.

நிறைவில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சி.பாண்டியன் கண் டன உரையாற்றினார். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் சிஐடியு மாவட்டக் குழு உறுப்பி னர் வீரசதானந்தம் தலைமை தாங்கினார்.

கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலா ளர் சங்க நிர்வாகி முனீஸ்வரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் (சிஐ டியு) சங்கத்தின் திருவில்லிபுத்தூர் கிளை நிர்வாகி ராஜாகிருஷ்ணன், கோவில் சிஐ டியு ஆட்டோ சங்க நிர்வாகி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு சாலைப்போக்கு வரத்து தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் திருமலை பேசினார். சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இராஜபாளையம் ஜவகர் மைதா னத்தில் சிஐடியு வேன் டாக்சி சங்க தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

துவக்கி வைத்து சாலை போக்குவரத்து சங்க மாநில துணைச் செயலாளர் கண்ணன், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சண்முகவேல், பால்சாமி, கூட்டு றவு சங்க மாவட்டச் செயலாளர் முனியாண்டி, டாக்ஸி சங்க துணைத் தலைவர் தங்க வேல், ஆட்டோ சங்க தலைவர் முருகன், செய லாளர் தங்கராஜ், சிபிஎம் நகரச் செயலாளர் சுப்பிரமணியன், அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற சங்க தலைவர் காத்தப்பன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் இராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக புறநகர் பணிமனை முன்பு ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் வி.ஜெயக் குமார் தலைமை வகித்தார்.

அரசு போக்கு வரத்து கழக காரைக்குடி மண்டல பொதுச் செயலாளர் வி.பாஸ்கரன், சாலை போக்கு வரத்து சங்க மாவட்டச் செயலாளர் வி. ஆனந்த், போக்குவரத்து புறநகர் கிளைச் செயலாளர் பாஸ்கரன், போக்குவரத்து நகர் கிளைச் செயலாளர் டி.துரைப்பாண்டி, போக்குவரத்து இராமேஸ்வரம் கிளைச் செயலாளர் ஜி.செல்லகுண்டு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.சந்தானம் நிறைவுரை யாற்றினார். செந்தில் நன்றி கூறினார்.