நர்சல் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்!
5 Nov 2026, 12:43 am

நர்சல் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்!

சேலம், நவ.4-சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஆர்.சி. செட்டிப்பட்டியில் இயங்கி வரும் நர்சல் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, இந்திய தொழிற்சங்க மையத்தினர் (சிஐடியு)புதனன்று மில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நர்சல் ஸ்பின்னிங் மில் நிர்வாகம் கடந்த கால ஊதிய ஒப்பந்தம், தொழிற்சங்க அங்கீகாரம் மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சினைகளில் உரிய நியாயத்தை நிர்வாகம் வழங்கவில்லை. தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 150 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மில்லில் பணிபுரியும் 230 தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிஐடியு மாவட்டத் தலைவர் டி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன், மாநில துணைத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் பி. பன்னீர்செல்வம், ஆர். கிருஷ்ணமூர்த்தி, சி. உதயகுமார், பி. முருகேசன் மற்றும் ஸ்பின்னிங் மில் கிளைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் இளங்கோ, பொருளாளர் நந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.