தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

33 மாதமாக ஊதிய உயர்வு மறுப்பு: சிஐடியு ஆர்ப்பாட்டம்

yesterday
33 மாதமாக ஊதிய உயர்வு மறுப்பு: சிஐடியு ஆர்ப்பாட்டம்
<p><strong>33 மாதமாக ஊதிய உயர்வு மறுப்பு: சிஐடியு ஆர்ப்பாட்டம்</strong></p><p>சேலம், ஜூன் 22- தொழிலாளர்களுக்கு விரோதமாக நடந்து கொள்ளும் நரசுஸ் ஸ்பின்னிங் ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், நியாயமான கோரிக்கையை நிறைவேற் ்றக்கோரியும் சிஐடியு சார்பில் திங்க ளன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஆர்.சி. செட்டிப்பட்டி பகுதியில் செயல்படும் நரசுஸ் ஸ்பின்னிங் மில்லில் நிரந்தரத் தொழிலாளர்களாக 80 பேரும், பி.எப். பிடித்தம் செய்யப்படும் தொழி லாளர்களாக 85 பேர், தற்காலிக தொழி லாளர்களாக 65 பேர் என பணியாற்றி வருகின்றனர். இவர்களில் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த 2023 முதல் சம்பள உயர்வு ஒப்பந்தத்தை ஆலை நிர்வா கம் ஏற்படுத்தவில்லை. இதை கண் டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் நல அதிகாரிகளிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இப்பி ரச்சனை, 33 மாதங்களை கடந்தவிட்ட நிலையில், ஆலை நிர்வாகம் 14.5 மாதத் திற்கு மட்டும் சம்பள உயர்வு வழங்கப் படும் எனவும் அதுவும் 77 ரூபாய் மட் டுமே நாள் ஒன்றுக்கு உயர்த்தி வழங்கப் படும் எனவும் பிடிவாதம் காட்டி வரு கிறது. இந்நிலையில், 33 மாதங்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என சிஐடியு சார்பில் ஆலை நுழைவாயில் முன்பு கிளைத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் திங்களன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் டி. உதயகுமார், மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஆர். வெங்கடபதி, எஸ்.கே. தியாகராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.