பட்டா கேட்டு காதில் பூ சுற்றி சிஐடியு போராட்டம்
23 Jul 2026, 11:43 pm

பட்டா கேட்டு காதில் பூ சுற்றி சிஐடியு போராட்டம்

மேட்டுப்பாளையம், ஜூலை 23- மேட்டுப்பாளையம் வட் டாட்சியர் அலுவலக வளா கத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி சிஐடியு பொதுத்தொழிலா ளர் சங்கத்தினர் காதில் பூ சுற்றி, பாய் விரித்து படுத்து உறங்கும் நூதன போராட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்காததை கண்டித்தும், உடனடியாக அரசு புறம்போக்கு நிலங்களை அளவிட்டு ஏழை எளியோருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரியும் மேட் டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொது தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலக வளா கத்தில் வியாழனன்று நூதன முறையில் காதில் பூ சுற்றியும், பாய் விரித்து படுத்து உறங் கும் போராட்டம் நடத்தினர். சிஐடியு பொது தொழிலாளர்கள் சங்க தாலுகா செயலாளர் பாஷா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதன் நிர்வாகிகள் ஷான வாஸ், சாமுவேல் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் வட்டாட்சியர் சரவணக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற் றது. இதில், நிலங்களை ஆய்வு செய்ய போதிய கால அவகாசம் வேண்டும். ஆய்வு செய்த பின்னர் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்று வட்டாட்சியர் தெரி வித்தார். வட்டாச்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது. சுமார் நான்கு மண நேரத்திற்கும் மேலான இந்த போராட்டத்தால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.