உள்ளாட்சிகளில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
21 Jul 2026, 10:48 pm
<p><strong>உள்ளாட்சிகளில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்</strong></p><p>தருமபுரி, ஜூலை 21- உள்ளாட்சிகளில் பணியாற்றும் ஒப் பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முறைசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி நிர்ணயம் செய்யும் போது, அரசாணை 2டி எண்:62ஐ அமல்படுத்தும் வகையில், தினக்கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் களை தமிழக அரசின் நேரடி ஊழியர் களாக மாற்ற வேண்டும். 5 ஆண்டுக ளுக்கு மேல் பணிசெய்து வரும் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அனைத்துப்பிரிவு ஒப்பந்தத் தொழிலா ளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர பணியில் தனி யார்மய அரசாணை எண்கள்:10, 139, 152 ஆகியவற்றை திரும்பப்பெற வேண் டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்திற்கு மாற்றாக, உணவுப் படி ரூ.100 தினந்தோறும் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு செவ் வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் சி.நாகராசன், மாவட்டத் தலைவர் சி.கலாவதி, மாவட்ட துணைத்தலைவர் சி.அங்கம் மாள் மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சி.குட்டியப்பன், மாவட்டப் பொருளாளர் சி.மணிகண் டன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், செய லாளர் சி.கருப்பண்ணன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஆர்.வெங் கடபதி, ஆட்டோ தொழிலாளர் சங்க செயலாளர் உதயகுமார் மற்றும் சங்கத் தின் நிர்வாகிகள் தனம், குமார், ராஜா, முருகேசன், முனியன், ரத்தினவேல் உட் பட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. பழனிசாமி தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்ட துணைத்தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன் வாழ்த்திப் பேசி னார். திருப்பூர் மாநகராட்சி, அவிநாசி, பல்லடம், திருமுருகன்பூண்டி, காங்கே யம், வெள்ளகோவில், உடுமலை ஆகிய நகராட்சிகள் மற்றும் மாவட்டத்தி லுள்ள பேரூராட்சிகளில் இருந்து பெண் கள் உள்பட 800க்கும் மேற்பட்ட உள்ளாட்சி ஊழியர்கள் பங்கேற்றனர். முடிவில், சங்கத்தின் மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ் நிறைவுரை யாற்றினார். தொடர்ந்து சிஐடியு நிர்வாகி கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர், திருப் பூர் மாநகராட்சி ஆணையர், மண்டல நக ராட்சிகள் நிர்வாக இயக்குநர், பேரூ ராட்சிகள் உதவி இயக்குநர் ஆகி யோரை சந்தித்து மனுக்களை அளித்த னர். ஈரோடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர் வாகி பாண்டியன் வாழ்த்திப் பேசினார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மாணிக்கம், துணைச்செயலாளர் எஸ்.ஜெகநாதன், பொருளாளர் ஏ.ஜெக நாதன், துணைத்தலைவர் ஆர்.மாரி முத்து உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட உதவிச்செயலாளர் சு.சுரேஷ் தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் எம்.அசோகன், மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட உதவிச் செயலாளர் மலர்கொடி, நிர்வாகிகள் நல்லம்மாள், மாரியம்மாள், அலெக்ஸ், ராசாத்தி, மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் உட்பட பலர் கலந்து கொண்ட னர். கோவை கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் உள் ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.ராஜாக்கனி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே. ரத்தினகுமார், சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் கே.மனோகரன், அரசு ஊழியர் சங்கத்தின் எம்.சாமிநாதன், சிவில் சப்ளை ஊழியர் சங்கத்தின் எம்.ஏழு மலை, மில் சங்கத்தின் எம்.ஆனந்த குமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
