கீரனூரில் புதிய பேருந்து பணிமனை அமைக்க கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
13 Jun 2026, 11:25 pm

கீரனூரில் புதிய பேருந்து பணிமனை அமைக்க கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜுன் 13-

கீரனூரில், புதிய பேருந்து பணிமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் புது

க்கோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மண்டலத் தலைவர் கே. கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். கோரிக்கைளை விளக்கி மண்டல பொதுச் செயலாளர் ஆர். மணிமாறன், பொருளாளர் எம். முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் சாமியய்யா, செந்தில்நாதன், ஆனந்தன், அண்ணாத்துரை உள்ளிட்டோர் பேசினர்.

போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாவட்டப் பொருளாளர் சி. மாரிக்கண்ணு, மாநகர ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ. ரகுமான் மற்றும் ஓய்வுபெற்ற சங்க நிர்வாகிகள் குணசேகரன், துரைச்சாமி, வின்சென்ட உள்ளிட்டோர் பேசினர்.

கீரனூரில் புதிய பேருந்து பணிமனை அமைக்க வேண்டும். திருச்சி, ஆலங்குடி, பட்டுக்கோட்டை, இலுப்பூர் கிளைகளின் தரைத் தளத்தை சீர்படுத்தித் தர வேண்டும். அனைத்துக் கிளைகளிலும் மதிய உணவு மற்றும் தேநீரின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.