திருவில்லிபுத்தூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>திருவில்லிபுத்தூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருவில்லிபுத்தூர், ஜன.7- வெனிசுலா அதிபர் நிக் கோலஸ் மதுராவை அத்து மீறி கடத்தி சென்ற அமெ ரிக்காவை கண்டித்தும், அவர் களை விடுவிக்கக் கோரியும் விருதுநகர் மாவட்டம் திரு வில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் சிஐடியு மற் றும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பிச்சைக் கனி தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட நிர்வாகி ரேணுகாதேவி துவக்கி வைத்துப் பேசினார். சிஐ டியு தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலா ளர் திருமலை, சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் சந்தானம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் பேசினர். சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் கே.அர்ஜு னன் நிறைவு செய்து பேசி னார். மாதர் சங்க நகரச் செய லாளர் தனலட்சுமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சசி குமார், நகரச் செயலாளர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
