சிஐடியு ஆர்ப்பாட்டம்
14 May 2026, 11:34 pm
<p><strong>சிஐடியு ஆர்ப்பாட்டம்</strong></p><p>ஈரோடு, மே 14- வடமாநிலங்களில் நிலவும் கொடூர உழைப்பு சுரண்ட லுக்கு எதிராக போராடிய தொழிலாளர்கள் தாக்கப்பட்டு, பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை கண் டித்து ஈரோட்டில், இந்திய தொழிற்சங்க மையத்தினர் (சிஐ டியு) வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு சூரம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் என்.முருகையா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.மாரப்பன், பொருளாளர் வி.சுரேஷ்பாபு, நிர்வாகி பி.மாரிமுத்து ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில் சிஐடியு மாவட்ட நிர்வா கிகள் எச்.ஸ்ரீராம், கே.பிஜூ, சி.ஜோதிமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
