பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
15 Jul 2026, 1:26 am
<p><strong>பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்</strong></p><p>பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், போக்குவரத்துக் கழகங்களைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும் சிஐடியு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், சாலைப் போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் வி.திருமுருகன், மண்டலச் செயலாளர் பி.முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சாந்தகுமாரி, கே.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.</p>
