மின்சார பேருந்துகளை அரசே ஏற்று நடத்த கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
28 Oct 2026, 1:05 am

மின்சார பேருந்துகளை அரசே ஏற்று நடத்த கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

கடலூர்,அக்.27-மின்சார பேருந்துகளை அரசே ஏற்று நடத்திட வேண்டும். வரவுக்கும், செலவுக்கும் உள்ள வித்தியாச தொகையை அரசே ஏற்க வேண்டும். 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த 9 மாதம் நிலுவைத்தொகை மற்றும் டி.ஏ. அரியர்சை உடனே வழங்கிட வேண்டும். நீதிமன்ற உத்தரவின் படி சுழல் முறை பணி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் எஸ்.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். சம்மேளன நிர்வாக குழு டி.முனியப்பன் பிள்ளை, துணை பொது செயலாளர் எஸ்.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொது செயலாளர்கள் எஸ்.முரளி, பி.முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் துணை தலைவர்கள் முத்துக்குமரன், செல்வராசு, தமிழ்ச்செல்வன், ராஜி, கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் பொருளாளர் எம்.அரும்பாலன் நன்றி கூறினார்.