தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒப்பந்த ஊழியர்கள் தினம்: சிஐடியு கோரிக்கை முழக்கம்

2 Oct 2026, 12:56 am
ஒப்பந்த ஊழியர்கள் தினம்: சிஐடியு கோரிக்கை முழக்கம்

ஒப்பந்த ஊழியர்கள் தினம்: சிஐடியு கோரிக்கை முழக்கம்

உதகை, அக்.1-ஒன்றிய அரசை கண்டித்து, ஒப்பந்த ஊழியர்கள் தினத்தில் இந்தியதொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். ஒப்பந்

தம் மற்றும் வெளி முகமை முறைகளை கைவிட வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர் எதிர்ப்பு தினமான வியாழனன்று (அக்.1) இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரிமாவட்டம், உதகை ஏடிசி திடல்முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் எல்.சங்கரலிங்கம் கண்டனவுரையாற்றினார். இபிஎப் 95 சங்க மாவட்டப் பொருளாளர் ராஜரத்தினம் வாழ்த்திப் பேசினார். முடிவில், நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை சங்க மாவட்ட நிர்வாகி சிம்புநன்றி கூறினார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி, மாவட்ட உதவி தலைவர்கள் கே.மோகன், கண்ணன், துணை செயலாளர்கள் கு.சிவராஜ், சு.சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் உருக்காலை நுழைவாயில் முன்பாக சிஐடியு தொழிசங்கம் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு சாலைப்போக்குவரத்து மாநில துணைத்தலைவர்எஸ்.கே.தியாகராஜன், சேலம் உருக்காலை சிஐடியு தொழிற்சங்க பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் உருக்காலை இண்ட்கோசர்வ் சொசைட்டிமற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.