முந்தய பக்கம்

வெண்டிங் கமிட்டி அமைக்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

21 May 2026, 12:24 am
வெண்டிங் கமிட்டி அமைக்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
<p><strong>வெண்டிங் கமிட்டி அமைக்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்</strong></p><p>அவிநாசி, மே 20- அவிநாசி நகராட்சியில் வெண்டிங் கமிட்டி அமைக்க வேண்டும் என வலியு றுத்தி சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சிலிண்டர் விலையை குறைத்து, தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர வியா பாரிகளுக்கு சலுகை விலையில் சிலிண் டர் வழங்க வேண்டும். சாலையோர வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் விற் பனை ஒழுங்குமுறை சட்டம் 2014 முறையை அமல்படுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகளின் பழைய அட்டையை புதுப்பித்து, கணக்கெடுப்பு எடுத்து புதிய அட்டை வழங்க வேண் டும். வெண்டிங் கமிட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு பொதுத்தொழிலா ளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் தலைவர் ஈஸ்வர மூர்த்தி தலைமை வகித்தார். இதில் பொதுச்செயலாளர் ராஜன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீ சன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி உட் பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram