சாலை போக்குவரத்தை சீர்குலைக்கும் ஒன்றிய அரசு
14 Jul 2026, 10:39 pm

சாலை போக்குவரத்தை சீர்குலைக்கும் ஒன்றிய அரசு

கோவை, ஜூலை 14- பொது போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்தை சீர்குலைக்கும் ஒன்றிய மோடி தலைமையிலான அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் செவ்வாயன்று சிஐடியு-வினர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்த பொழுதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய மோடி தலைமையி லான அரசு மறுத்து வருகிறது. உடனடியாக எரி பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடை முறையை கைவிட வேண்டும்.

தமிழகத்தில் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள மீட்டர் கட்டணத்தை உயர் நீதிமன்ற உத்தரவின்படி உட னடியாக கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். போக்குவரத்து கழக வரவு செலவு வித்தியாச தொகையை அரசு வழங்கிட வேண்டும்.

இடை தரகர்கள் மூலமாக விஎல்டிடி கட்டணத்தை நிர் ணயிக்கக் கூடாது. பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் மோட் டார் தொழிலாளர் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் கே. மனோகரன் தலைமை வகித்தார்.

இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே.முத்துக்குமார், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வேளாங்கண்ணி ராஜ், சாலை போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் வடவள்ளி மகேந்திரன் உள்ளிட்ட தலை வர்கள் உரையாற்றினர்.

முடிவில் மகேஷ் நன்றி கூறினார். இதனையடுத்து, ஆட்சியர் அலு வலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிர்வாகிகள் நேரில் சென்று வழங்கினர். ஈரோடு ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் வாயிலாக மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.

சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பி.கனகராஜ் மற் றும் உழைக்கும் மக்கள் சங்க பொதுச் செயலா ளர் சி.முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் பி.பொன்னுசாமி தலைமை வகித்தார்.

சிஐடியு மாவட்டச் செயலா ளர் ந.வேலுசாமி, மோட்டார் சங்க மாவட்டச்செய லாளர் சு.சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாண்டியன் நன்றி கூறி னார். சேலம் சேலம் மாவட்டம், கந்தம்பட்டி பகுதியில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே தியாக ராஜன் தலைமை வகித்தார்.

இதில், அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர் சங்க மண்டல பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ சங்க செயலாளர் உதயகுமார், சாலை போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் முருகேசன், ஓய்வு பெற்றோர் சங்க செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.சண்முகம் தலைமை வகித்தார்.

இதில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.முரளி, ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜகோபால் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். அரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து தலைவர் கே.பெருமாள் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் ஜெயராமன், அரசு போக்குவரத்து பொதுச் செயலாளர் ரகுபதி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

உடுமலை திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நக ராட்சி அலுவலகம் முன்பாக சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சம்மேளன உறுப்பினர் சுதாசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஜஹாங்கீர், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் பாபு, சிபிஎம் நகர செயலாளர் தண்டபாணி, விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்..