தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்வாரிய தனியார்மய முயற்சிக்கு எதிர்ப்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

1 Oct 2026, 12:37 am
மின்வாரிய தனியார்மய முயற்சிக்கு எதிர்ப்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

மின்வாரிய தனியார்மய முயற்சிக்கு எதிர்ப்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 30 -மின்வாரியத்தை தனியார்மயம் ஆக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசையும், மின்வாரியத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் கணக்கீடு பணியை தனியார் முகமையிடம் ஒப்படைக்கக் கூடாது, கால நிர்ணய வேலைவாய்ப்பு, தனியார் அரசு கூட்டுத் திட்டம் என்ற பெயர்களில் ஒப்பந்த முறையை புகுத்தி மின்வாரியத்தை தனியார் மயம் செய்யக் கூடாது, ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ற பெயரால் மின் பகிர்மானத்தை முழுமையாக தனியார்மயம் செய்வதை ஏற்க முடியாது, ஒப்பந்த தொழிலாளர் மூலமும், நேரடி நியமனம் மூலமும் கள உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்பாமல், 10ஆயிரம் நபர்களை 5 ஆண்டுக்கு மட்டும் ஒப்பந்த முறையில் எடுக்கப்படும் என்றஅறிவிப்பை கைவிட வேண்டும், மின்வாரியத்தை சிதைக்கும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் மின் கணக்கீடுதனியார் மயம் என்பதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் திருப்பூர் பிஎன் ரோடு மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மத்திய அமைப்பின் திருப்பூர் தலைவர் கே.மோகன்தாஸ் தலைமை ஏற்றார். இதில், திருப்பூர் கிளைச் செயலாளர் பி.மார்க்ஸ், ஓய்வு பெற்றோர் நலஅமைப்பின் செயலாளர் ஆர்.நாகராஜன், திருப்பூர் கோட்டத் தலைவர் எம்.கே.சரவணன் ஆகியோர் உரையாற்றினர். திருப்பூர் திட்டத் துணைத் தலைவர் எம்.வீரன் நன்றி கூறினார்.

உடுமலை

உடுமலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திட்டத் தலைவர் ஜெகானந்தா தலைமை வகித்தார். இதில், திட்டச் செயலாளர் வெள்ளிங்கிரி, பொருளாளர் பாலசுப்பிரமணியம்,அங்கலகுறிச்சி கோட்டச் செயலாளர் பகவதிராஜூ உள்ளிட்டோர் பேசினர். முடிவில், பொள்ளாச்சி கோட்டச் செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.