டாஸ்மாக் நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோதப் போக்கு: சிஐடியு ஆவேச ஆர்ப்பாட்டம்
8 Jul 2026, 10:21 pm

டாஸ்மாக் நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோதப் போக்கு: சிஐடியு ஆவேச ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 8- டாஸ்மாக் நிர்வாகத்தின் தொழிற்சங்க மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, கோவையில் சிஐடியு சார்பில் புதனன்று பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. டாஸ்மாக் நிறுவன முறைகேடு களைத் தடுத்து, நிர்வாகத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நல் லெண்ணத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த டாஸ்மாக் ஊழியர் சங்கத் தலைவர் ஜான் அந் தோணி என்கிற ராதாகிருஷ்ணனை நிர்வாகம் தன்னிச்சையாகப் பணி யிடை நீக்கம் செய்துள்ளது. டாஸ் மாக் ஊழியர்களின் மனக்கு முறலை மிகச்சரியாக எதிரொலித்த இந்த கானொலி டாஸ்மாக் ஊழியர் கள் மட்டுமல்லாது பொதுமக்களிட மும் மிகுந்த வரவேற்பை பெந் றது. இந்த கானொலி வைரலான நிலையில், இந்த முறைகேட்டை களைவதற்கு பதிலாக, பேட்டிய ளித்த டாஸ்மாக் ஊழியர் சங்கத் தின் தலைவர் ஜானை பணியிடை நீக்கம் செய்துள்ளது டாஸ்மாக் நிர் வாகம். கருத்துச் சுதந்திரத்தை பறிக் கும் இந்நடவடிக்கையை கண் டித்து தமிழகம் முழுவதும் போராட் டங்கள் வெடித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோக ரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் பேசு கையில், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை பேச்சுரி மையை பறிக்கும் வகையில் ஜான் அந்தோணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத் தக்கது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசு அறிவித்துள்ள 25 சதவீத சம்பள உயர்வுக்குப் பின்னும் மேற் பார்வையாளருக்கு ரூ.22,313, ஊழி யருக்கு ரூ.19,413, உதவியா ளருக்கு ரூ.17,928 மட்டுமே ஊதிய மாக கிடைக்கிறது. 23 ஆண்டுகள் பணியாற்றியும் ஊழியர்களால் ரூ.23,000 சம்பளத்தைக் கூட தொட முடியவில்லை. எனவே, குறைந்தபட்ச சம்பளமாக ரூ.26,000 எனத் தீர்மானிக்க வேண்டும். தொழிற்சங்கங்களுடன் ஆலோ சிக்காமல் தன்னிச்சையாக ஊதிய உயர்வு அறிவித்தது ஏற்புடைய தல்ல. தொகுப்பூதிய முறையை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கூடுதலாக ரூ.10 வாங்கினால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப் படுவார்கள் என அமைச்சர் எச்சரிக் கிறார். தவறு செய்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்கலாம்; ஆனால், இந்த முறைகேடுகளில் மேலதிகாரி களுக்கு பங்கு இல்லையா? கடை களுக்கான முழு வாடகை, மின் சாரக் கட்டணத்தை அரசு வழங்கு வதில்லை. பெட்டிகளில் வரும் பாட்டில்கள் உடையும்போது, அந்த சேதங்களுக்கான தொகையை ஊழியர்களே ஏற்க வேண்டியுள்ளது. இதனால் மாதந் தோறும் ஊழியர்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை செலவழிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஊழியர்கள் மீது மட்டும் பழி போட்டு அதிகாரிகள் தப்பித்துக் கொள்ள கூடாது என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.