900 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதா? ‘கோரோஹெல்த்’ நிறுவன அராஜகத்தை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்!
17 Jul 2026, 9:36 pm
<p><strong>900 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதா? ‘கோரோஹெல்த்’ நிறுவன அராஜகத்தை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்!</strong></p><p>சென்னை, ஜூலை 17 – கோரோஹெல்த் நிறுவன ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, வெள்ளியன்று (ஜூலை 17) சென்னை கிண்டி அஞ்சலகம் முன்பு, சிஐடியு தென்சென்னை மாவட்டக்குழுவும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சார்பு ஊழியர்கள் சங்கமும் (யுனைட்) இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கோரோஹெல்த் நிறுவனம், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு தகவல் தொழில் நுட்ப ரீதியான சேவை வழங்குகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரள மாநிலங் களில் அலுவலங்களை கொண்டுள்ளது. அண்மையில் கேரள அலுவலகத்தில் 900-க்கும் அதிகமான ஊழியர்களை சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்துள்ளது. உயர்நீதிமன்ற அறிவுறுத்த லின் பேரில், கேரள அரசு 2 முறை அழைப்பு விடுத்தும் கோரோஹெல்த் நிர்வாகம் பேச்சுவார்த் தைக்கு தயாரில்லை. எனவே, பணி நீக்கம் செய்யப் பட்ட ஊழியர்களுக்கு கோரோஹெல்த் நிறுவனம் மீண்டும் பணி வழங்க வேண்டும்; தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை ஒன்றிய, மாநில அரசுகள் முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் ஏ. முருகா னந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி. செந்தில்குமார், பொருளாளர் ஏ. நடராஜன், யுனைட் பொதுச்செய லாளர் அழகுநம்பி வெல்கின், நிர்வாகிகள் கௌ தம், நவநீத கிருஷ்ணன், ஜெயின் ராய், வினோத், சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்டோர் பேசினர்.</p>
