ரூ.100 பத்திரத்தில் கொத்தடிமை சாசனம் தனியார் நிறுவனத்திற்கு எதிராக ஜூலை 21-ல் சிஐடியு போராட்டம்!
15 Jul 2026, 9:57 pm
<p><strong>ரூ.100 பத்திரத்தில் கொத்தடிமை சாசனம் தனியார் நிறுவனத்திற்கு எதிராக ஜூலை 21-ல் சிஐடியு போராட்டம்!</strong></p><p>விருதுநகர், ஜூலை 15: சேலம் மாவட்டம் ஆத்தூர் நக ராட்சியில் தூய்மைப் பணியாளர் களை ரூ.100 முத்திரைத்தாளில் எழுதி வாங்கி கொத்தடிமை முறையில் நடத்த முயற்சிக்கும் தனியார் நிறு வனத்தின் செயலுக்குத் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனம் (சிஐடியு) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உரிமை கோரினால் வேலை நீக்கம்! சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியன் புதனன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆத்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி மேற் கொள்ளும் ‘எஸ்.ஆர் எண்டர்பி ரைசஸ்’ நிறுவனம், தொழிலாளர் களிடம் கொத்தடிமை ஒப்பந்தப் பத்தி ரம் ஒன்றில் கட்டாயக் கையெ ழுத்து வாங்கியுள்ளது. ‘சட்டப்பூர்வ உரிமைகளான வார விடுப்பு, மருத்து வக் காப்பீடு, பிஎப் ஆகியவற்றைக் கேட்கக் கூடாது; தொழிற்சங்கங்களு டன் இணைந்து போராட மாட்டேன்’ என அச்சுறுத்தி எழுதி வாங்கி யிருப்பது அப்பட்டமான மனித உரி மை மீறலாகும்” எனச் சாடியுள்ளார். ஒப்பந்த முறையை ரத்து செய்க! இத்தகைய விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனத்தின் உரிமத்தையும், அதன் ஒப்பந்தப் பதிவையும் தொழி லாளர் துறையும், நகராட்சி நிர்வாக மும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சிப் பணிகளைத் தனியார்மயமாக்கும் அரசாணைகள் 10, 139 மற்றும் 152 ஆகியவற்றைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த அராஜகப் போக்கைக் கண்டித்தும், தனியார்மயமாக்கல் கொள்கையை எதிர்த்தும் வரும் ஜூலை 21 அன்று தமிழகம் முழு வதும் சம்மேளனத்தின் சார்பில் மிகப் பெரிய அளவில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட் டம் நடைபெறும் என்று அவர் அறி வித்துள்ளார்.</p>
