தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காப்பீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்திடுக சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

1 Oct 2026, 12:44 am
காப்பீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்திடுக  சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

காப்பீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்திடுக சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், செப்.30-நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ்., குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு, வெப்படை நால்ரோடு, திருச்செங்கோடு அண்ணா சிலை, குமரமங்கலம் பேருந்து நிறுத்தம் ஆகிய 5 இடங்களில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் பணியின்போது எதிர்பாராத விபத்தில் சிக்கி வேலை செய்ய முடியாத நிலை ஏற்

பட்டால் ரூ.2 லட்சம், ஒரு உறுப்பு இழப்புக்கு ரூ.1 லட்சம், விபத்து மரணத்துக்கு ரூ.4 லட்சம், இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கி வந்த ஒன்றிய அரசின் PMJJBY, PMSBY குழு காப்பீட்டுத் திட்டம் 2018 இல் ரத்து செய்யப்பட்ட, இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். விசைத்தறி உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் 8 மணி நேரவேலை, மாதம் குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரம் ஊதியம், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம், இஎஸ்ஐ, பிஎப், கிராஜுவிட்டி, மருத்துவம் மற்றும் குடியிருப்பு வசதிகளை உறுதிசெய்ய வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுக்காகமாதம் ரூ.1,250 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நிறுத்தப்பட்டுள்ளதை மீண்டும் வழங்க வேண்டும்.

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் 75 சதவீத கூலி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகமும், விசைத்தறி நிர்வாகமும் உடனடியாக தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டங்களில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், வெங்கடேசன், வெங்கடாஜலம், ராமஜெயம், ஈஸ்வரன், ஆகியோர் தலைமை தாங்கினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.தமிழ்மணி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அசோகன், மாவட்டத் தலைவர் கே.மோகன், சிஐடியு உதவி தலைவர் தனபால், சிபிஎம் நகரச் செயலாளர் சீனிவாசன், எலச்சிபாளையம் ஒன்றியக் குழு செயலாளர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் கே.பாலுசாமி, கே.குமார், மாதேஸ்வரி, செங்கோடன், ராஜேந்திரன், முத்துசாமி, மோகன், முருகேசன், சக்திவேல், செங்கோட்டையன், வீரமணி, அங்கமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.