முந்தய பக்கம்

கடலூர் மாவட்டத்தில் சிஐடியு 5 மையங்களில் மறியல்

23 Dec 2025, 4:05 pm
கடலூர் மாவட்டத்தில் சிஐடியு 5 மையங்களில் மறியல்
<p><strong>கடலூர் மாவட்டத்தில் சிஐடியு 5 மையங்களில் மறியல்</strong></p> <p>கடலூர், டிச.23- தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி &nbsp;கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் பேரணியாக சென்று, அண்ணா பாலம் அருகே சாலை &nbsp;மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் டி.பழனிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலை வர்கள் வி.சுப்புராயன், கே.சாவித்திரி, சாந்தகுமாரி, கே.ஸ்டாலின், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 22 பெண்கள் உள்ளிட்ட 115 பேர் கைதானார்கள். &nbsp;நெய்வேலி மெயின் பஜாரில் நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எஸ். திருஅரசு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் டி.ஜெயராமன், எம்.சீனிவாசன் முன்னிலை வகித்தனர். 17 பெண்கள் உட்பட 72 பேர் கைதானார்கள். விருத்தாசலத்தில் சிஐடியு மாநில குழு உறுப்பினர் என்.ஆர்.ஜீவானந்தம் தலை மையில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் என்.தேசங்கு மற்றும் ஆர்.தனம் முன்னிலையில் 15 பெண்கள் உள்ளிட்ட 76 பேர் கைதாகினர். &nbsp;வடலூரில் கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி தலை மையில், பி.முருகன் முன்னிலையில் 17 பெண்கள் உள்ளிட்ட 42 பேர் கைதானார்கள். சிதம்பரத்தில் கட்டுமான சங்கத் தலைவர் என். இளங்கோவன் தலைமை யில், மாவட்ட நிர்வாகிகள் எஸ். சங்க மேஸ்வரன், எஸ். செம்மலர் முன்னிலை யில் 17 பெண்கள் உள்ளிட்ட 49 பேர் கைதா னார்கள். கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மொத்தம் 88 பெண்கள் உள்ளிட்ட 353 &nbsp;பேர் கைதானார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram