தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டாசு தொழில், தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் சிஐடியு மாநிலச் செயலாளரிடம் மனு

19 May 2026, 1:13 am
பட்டாசு தொழில், தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் சிஐடியு மாநிலச் செயலாளரிடம் மனு

பட்டாசு தொழில், தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் சிஐடியு மாநிலச் செயலாளரிடம் மனு

சென்னை, மே 18- பட்டாசு தொழிலையும் தொழி லாளர்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வலி யுறுத்தி சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணனிடம் தமிழ்நாடு பட்டாசுத் தொழில் - தொழிலாளர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் நா.ராசா மனு அளித்தார்.

அந்த மனுவில், பட்டாசு உற்பத்தி தொழில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் தரவுகளின்படி பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசின் அளவு மிகக் குறைவாகவே உள்ளது.

இருப்பினும் தொடர் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க பட்டாசு ஆலை களில் ஏற்படும் விபத்துகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என தெரிந்தும் பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் வாழ்தார தேவைக்காக இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்.

பட்டாசு உற்பத்திக்கு உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பல நேரங்களில் பின்பற்றாததே விபத்துக்கு காரணமாக அமைகின்றன.

எனவே, பட்டாசு உற்பத்தியை பாது காப்பான முறையில் மேற்கொள்வதை அரசு நிர்வாகங்கள் உறுதிபடுத்த வேண்டும்.

வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை கள் மற்றும் பட்டாசு ஆலை உரிமை யாளர்களை ஒருங்கிணைத்து செயல்படு வதைப்போல தொழிலாளர்களின் தரப்பில் தொழிற்சங்கங்களையும் இதில் இணைக்கப்பட வேண்டும்.

தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழிலாளர்களுக்கு உயிரிழப்போ பாதிப்போ ஏற்பட்டால் உடனடியாக இழப்பீடுகளை வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பணியின்போது சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றப்படுவதை தொடர் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

ஒரு வேளை விதிமீறல் இருந்து அவை கண்டறியபட்டால், அவற்றை சரி செய்த நிறுவனங்களுக்கு உரிய அனுமதி வழங்கி ஆலையை தொடர்ந்து இயங்க அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதம் செய்யக் கூடாது.

ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி தரமற்ற பட்டாசுகள் விற்பனையை தடுக்க அதற்கென தனியாக நெறிமுறைகளை வகுக்க வேண்டும். தொழி லாளர்களின் உடல்நலனை பாதுகாக்க அவ்வப்போது அந்தந்த பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தி உரிய மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

இதுபோன்ற கோரிக்கைகளை இடதுசாரி மக்கள் பிரதிநிதிகள் மூலம் சட்டமன்றத்திலும் தொழிற்சங்கத்தின் மூலம் மக்கள் மன்றத்திலும் சிஐடியு எதிரொலிப்பதன் மூலம் தொழி லாளர்களுக்கு தேவையான தீர்வுகள் கிடைக்கும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.