தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாம்சங், ஹூண்டாய் தொழிலாளர் பிரச்சனைகள் : அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸிடம் சிஐடியு சார்பில் மனு!

16 Jul 2026, 9:14 pm
சாம்சங், ஹூண்டாய் தொழிலாளர் பிரச்சனைகள் :  அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸிடம் சிஐடியு சார்பில் மனு!

சாம்சங், ஹூண்டாய் தொழிலாளர் பிரச்சனைகள் : அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸிடம் சிஐடியு சார்பில் மனு!

காஞ்சிபுரம், ஜூலை 16 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங், ஹூண்டாய் மற்றும் எஸ்.எச். எலக்ட்ரானிக்ஸ் ஆகிய முன் னணி நிறுவனங்களில் நிலவி வரும் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தித் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெ. முகமது பர்வேஸிடம் சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டக் குழு சார்பில் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

‘சாம்சங்’கின் 14 மாத கால பழிவாங்கல் நடவடிக்கை

சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ. முத்துக்குமார் மற்றும் தலைவர் டி. ஸ்ரீதர் ஆகியோர் வியா ழனன்று அளித்துள்ள மனுவில், சாம்சங் தொழிற்சாலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு தொழிற்சங்கம் அமைத்த காரணத்திற்காக, சங்க நிர் வாகிகள் 27 பேர் கடந்த 2025 மார்ச் முதல் தற்காலிகப் பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 14 மாதங்களாக வேலை மறுக்கப்பட்டு வாடும் இந்தத் தொழி லாளர்களின் வழக்கு, ஸ்ரீபெரும் புதூர் தொழிலாளர் துறை துணை ஆணையர் முன்னிலையில் நிலுவை யில் உள்ளது. சாம்சங் நிர்வாகத்தின் இந்த வெளிப்படையான பழிவாங் கல் நடவடிக்கையைத் திரும்பப் பெற்று, தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட சங்க நிர்வாகிகளை மீண்டும் பணியில் அமர்த்த அந்நிறு வனத்திற்கு அமைச்சர் உரிய வழி காட்டுதலை வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஹூண்டாய் நிர்வாகத்தின் சட்ட விரோதப் பணிநீக்கம்

ஹூண்டாய் தொழிற்சாலையில் சட்டப்படி வேலைநிறுத்தப் போரா ட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, 68 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முடியும் வரை எந்தவொரு இறுதி நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்ற முந்தைய உடன்படிக்கைக்கு மாறாக, 1947 தொழிற் தகராறுகள் சட்டத்தை மீறி ஹூண்டாய் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தச் சட்டவிரோத நடவடிக்கை யைத் திரும்பப் பெற்று அனைவரை யும் மீண்டும் பணியமர்த்த தொழி லாளர் துறை உடனடியாகத் தலை யிட வேண்டும் எனவும் சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

எஸ்.எச்.எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எம்ஆர்எப் போராட்டங்கள்

நீர்வல்லூர் எஸ்.எச். எலக்ட்ரா னிக்ஸ் தொழிற்சாலையில் சங்கம் அமைத்த காரணத்திற்காக, 93 நிரந்த ரத் தொழிலாளர்களை எவ்வித முறை யான விசாரணையும் இன்றி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இத்தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்திட அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பெரம்பலூர் எம்ஆர்எப் (MRF) தொழிற்சாலை யில் நடைபெற்று வரும் தொழி லாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குச் சுமுகத் தீர்வு காணும் வகையில், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் சிஐடியு தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸை சந்தித்த சிஐடியு மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் இ. முத்துக்குமார், சாம்சங் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பி. எல்லன், துணைத்தலைவர் எல். பாலாஜி. உடன் அயல்வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.கே. தென்னரசு.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.