மக்கள் நல கோரிக்கைகள்: சிஐடியு சார்பில் மனு
19 Jun 2026, 12:11 am
<p><strong>மக்கள் நல கோரிக்கைகள்: சிஐடியு சார்பில் மனு</strong></p><p>மேட்டுப்பாளையம், ஜூன் 18- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் சிஐடியு தாலுகா பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பங் கேற்று பல்வேறு மக்கள் நலக் கோரிக்கை களை வலியுறுத்தி வியாழனன்று மனு அளித்தனர். அந்த மனுவில், பவானி நதி தொடர்ந்து மாசுபடுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழிற்சாலை கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளி யேறும் கழிவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது. மேட்டுப்பாளையம் நகரில் தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தி, கழிவுநீர் மேலாண்மை மற்றும் சுகாதார வசதி களை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியு றுத்தப்பட்டது. மேலும், பேருந்து நிலையத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர் மீது நட வடிக்கை எடுத்து ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், வேழம் இயலியல் பூங்கா மற்றும் வனப்பகுதிகளில் பாதுகாப்பு நடவ டிக்கைகளை அதிகரிக்க வேண்டும், மனித- விலங்கு மோதலை தடுக்க திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். வனபத்ரகாளியம் மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான தங்கும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும், பவானி ஆற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது. அத்துடன், அதிவேகமாக இயங்கும் தனி யார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், புறவழிச்சாலை திட்டத்தை விரை வாக செயல்படுத்த வேண்டும், மக்கள் மற் றும் மாணவர்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும், கூடுதல் காவலர்களை நியமித்து புறக்கா வல் நிலையங்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப் பட்டன. இந்த மனுவை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு பரிசீலனை செய்வதாக தெரிவித்த னர். இந்நிகழ்ச்சியில், சிஐடியு நிர்வாகிகள் மனசே சாமுவேல், முகமது அலி ஜின்னா, சானவாஸ், குணசேகரன், ஹபிபுல்லா, நாக லட்சுமி தௌலத் நிஷா, பார்த்தசாரதி, லூயிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.</p>
