மாநில - தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறைகளை சரி செய்யக் கோரி சிஐடியு மனு
22 Jul 2026, 10:16 pm
<p><strong>மாநில - தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறைகளை சரி செய்யக் கோரி சிஐடியு மனு</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 22 - மாநில மற்றும் தேசிய நெடுஞ்சா லையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரி கன்னியா குமரி மாவட்ட மோட்டார் ஒர்க்கர்ஸ் யூனி யன் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பரமசிவன், குமரி மாவட்ட தலை வர் எ.பகவதியப்பன் தலைமையில் கொடுக்கப்பட்ட அந்த மனுவில், “குமரி மாவட்டத்தில் உள்ள மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதசாரி கள் சாலைகளை கடந்து செல்வதற்கு சாலையில் 6 கோடுகள் கொண்ட குறி யீடுகளாக குறிக்கப்பட்டுள்ளது. அவை தற்சமயம் வேகத்தடைகளை போல போடப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ வில் சென்ற கர்ப்பிணி பெண்கள் ஒரு சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. அதில், இரு சக்கர வாகனம் முதல் கனரக வாகனம் வரை கடக்கிற போது ஏற்படுகின்ற அதிர்வினால் பல வாக னங்களின் வீல் போல்ட் மற்றும் முன்பக்க கண்ணாடி உடைவு, மற்ற உதிரிபாகங்கள் சேதமடைந்து, விபத்து களும் ஏற்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பேருந்துகளில், பின் இருக்கையில் இருப்பவர்கள் அதிலும் வயதான வர்களுக்கு இதனால் முதுகெலும்பு கடுமையான பாதிப்புக்கு உள்ளாக அதிக வாய்ப்பு உள்ளது. இரு சக்கர வாகனம், மற்ற வாகனங்கள் அனைத்தி லும் உதிரி பாகங்கள் அதிக தேய்மான மடையவும் காரணமாக உள்ளது. மேலும், ஆரல்வாய்மொழி சிவந்தி ஆதித்தனார் மண்டபம் அருகில் போடப் பட்டுள்ள புதிய சிறிய பாலம் சாலைக்கு சமமாக அமைக்கப்படா மல் சாலையை விட உயரமாக அமைக்கப் பட்டுள்ளதால், பேருந்துகளில் பயணம் செய்வோர் இருக்கையை விட்டு மேலே தூக்கி வீசப்பட்டு முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது. அதைப்போல் தோவாளை ஆற்றின் அருகில் போடப்பட்டுள்ள சாலை சுமார் 10 வருடங்களுக்கு மேலாக குண்டும் குழியுமாக உள்ளது. இதில் செல்கிற வாகனங்கள் கடுமையாக சேதமடை கின்றன” என தெரிவித்துள்ளனர்.</p>
