அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க சிஐடியு மனு
26 Jun 2026, 1:31 am
<p><strong>அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க சிஐடியு மனு</strong></p><p>அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க சிஐடியு மனு</p><p>திருப்பூர், ஜூன் 25 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படை யில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சட்டப்படி நியாயமான ஊதியம் வழங்குவ துடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சிஐடியு சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சி யரிடம் நேரில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நார ணவரேயிடம் சிஐடியு திருப்பூர் மாவட்ட செய லாளர் கே.ரங்கராஜ் தலைமையில் ஒப்பந்த ஊழியர்கள் புதன்கிழமை அளித்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்து வமனைகளில் தனியார் ஒப்பந்த நிறுவனங் களால் பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்க ளுக்கு அரசின் குறைந்தபட்ச ஊதிய சட்டப் படி திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறி வித்த தினசரி ஊதியங்கள் கணக்கிட்டு வழங்கப்படுவதில்லை. குறைத்தே வழங்கப் படுகிறது. மேலும் ஊழியர்களின் சம்பள ரசீதும் கொடுக்கப்படுவதில்லை. அதோடு, பல காரணங்களைச் சொல்லி அவர்களிடம் சம்பள பிடித்தமும், அந்த தனியார் நிறுவனங் கள் செய்கின்றன. இதனால் ஊழியர்கள் கடு மையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, பல ஆண்டுகளாக பணி செய்யும் மேற்கண்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அறிவித்த மாநகராட்சியில் வேலை செய் யும் மருத்துவமனை ஊழியர்களுக்கு ரூ.761 தினசரி ஊதியமாகவும், நகராட்சிகளில் உள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கு ரூ.646 தினசரி ஊதியமாகவும் கணக்கிட்டு வழங்கிட வேண்டும். ஊழியர்களின் பி.எஃப். பிடித்தம், ஒப்பந்த நிறுவனத்தின் பங்குத் தொகையோடு முறையாக செலுத்த வேண்டும். மாதாமாதம் சம்பள ரசீது வழங்கப் பட வேண்டும். வேலை நேரம் உரிய வகை யில் வரையறுக்கப்பட வேண்டும். விதிமுறை களுக்கு மாறாக ஊழியர்களிடம் தொகை பிடித்தங்கள் செய்யக்கூடாது. இந்த கோரிக் கைகள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவ டிக்கைகள் எடுக்க வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.</p>
