சாலையோர வியாபாரிகளை அச்சுறுத்தக் கூடாது: மண்டல அதிகாரியிடம் சிஐடியு மனு!
3 Jun 2026, 11:24 pm
<p><strong>சாலையோர வியாபாரிகளை அச்சுறுத்தக் கூடாது: மண்டல அதிகாரியிடம் சிஐடியு மனு!</strong></p><p>சென்னை, ஜூன் 3- தெருவோர வியாபாரிகளின் வாழ்வா தாரத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி கைவிடக் கோரி, சென்னை மாநகராட்சி செனாய் நகர் 8 வது மண்டல அதிகாரி இனியனிடம், சாலையோர விற்ப னையாளர்கள் மற்றும் சிறுகடை தொழி லாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் மனு அளிக்கப்பட்டது. அமைந்தகரை போகன் வில்லா பார்க் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வியாபாரி களுக்கு அதிகாரிகள் அடிக்கடி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி மிரட்டுவது, உயர் நீதி மன்றம் அமைத்த வெண்டிங் கமிட்டியின் அதி கார வரம்பை மீறும் நீதிமன்ற அவமதிப் பாகும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, அச்சுறுத்தல் நோட்டீஸ்களை நிறுத்தி, நீண்டகாலமாக கூட்டப்படாத வெண்டிங் கமிட்டி கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக செனாய் நகரில் உள்ள மண்டலம் 8 அலுவலகத்தை தொழிலாளர் கள் முற்றுகையிட்டு இந்த மனுவை அளித்தனர். இந்நிலையில் கோரிக்கைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மண்டல அதிகாரி உறுதியளித்தார். இந்தச் சந்திப்பில் சங்க மாவட்டச் செயலா ளர் பி. சுந்தரம், நகர விற்பனைக்குழு உறுப்பி னர்கள் டி. சுகுமார், பி.கே. மூர்த்தி, டி.மாலதி, பூபதி, மசூத் ஆலம், குமார் ஆகியோரும், போகன் வில்லா பார்க் நிர்வாகி அலெக்ஸ், டவர் பார்க் நிர்வாகிகள் நிஷா, பூமல்லி மற்றும் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் பங்கேற்றனர். அதிகாரிகளின் அடாவடி நீடித்தால் மண்டல அலுவலகத்தை முற்று கையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.</p>
