தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின் துறையைத் தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிடுக!

7 Oct 2026, 10:14 pm
மின் துறையைத் தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிடுக!

மின் துறையைத் தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிடுக!

சிஐடியு வலியுறுத்தல் சென்னை, அக். 7 –தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ள நடவடிக்கைக்கு இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனச் சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.

“மின்சார சட்டம் 2003-ன் அடிப்படையில் ஏற்கனவே மாநில மின்வாரியங்களைச் சிதைத்துத் தனித்தனி நிறுவனங்களாக உருமாற்றியுள்ள நிலையில், தற்பொழுது மாநில அரசு பொது-தனியார் கூட்டுடன் (PPP) மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மின் துறையைத் தனியார் மயமாக்கும் ஆபத்தான நடவடிக்கையாகும். பல்வேறு மாநிலங்களிலும், முந்தைய காலகட்டத்திலுமே இத்திட்டத்திற்கு எதிராகத் தொழிற்சங்கங்களும் பொதுமக்களும் போராடித் தடுத்துள்ளனர். ஆனால், தற்போது இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் நுகர்வோருக்கு மிகப்பெரிய பொருளாதாரச் சுமை ஏற்படும்.

மீட்டர் கட்டணம், உச்சபட்ச நேர மின் நுகர்வுக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்புக் கட்டணம் போன்றவைகளால் எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். எதிர்காலத்தில் இது முழுமையான ப்ரீபெய்ட் மீட்டராக மாற்றப்பட்டு, பணம் இருந்தால் மட்டுமே மின்சாரம் கிடைக்கும் நிலை உருவாக்கப்படும். மேலும், மின்வாரியத்தில் நிரந்தரப் பணிகள் குறைக்கப்படுவதால் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு முழுமையாகப் பறிபோகும்; விவசாய மற்றும் குடிசை மின் இணைப்புகளும் இதனால் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகும்.

எனவே, நுகர்வோர் மற்றும் மின் ஊழியர்களின் நலனைப் பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.