தனியார் மூலம் மின்கணக்கிடும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்
26 Sept 2026, 10:18 pm
<p><strong>தனியார் மூலம் மின்கணக்கிடும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, செப். 26 –மின் கணக்கீட்டுப் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் உத்தரவைத்திரும்பப் பெறவேண்டும் என்று தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.</p><p>இதுதொடர்பாக மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் தி. ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் உற்பத்தியில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் மின்கணக்கீட்டுப்பணியைத்தனியாரிடம் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் 3.51 கோடி மின் இணைப்புகள் உள்ள நிலையில், மின் கணக்கீட்டுப் பிரிவில் 5 ஆயிரம் காலிப்பணியிடங்கள் (87.9சதவீதம்) காலியாக உள்ளன. கடந்த 2013ஆம்ஆண்டு முதல் ஓய்வுபெற்ற மற்றும் வெளிப்புற பணியாளர்களைக் கொண்டு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும்சூழலில், நடப்பாண்டில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வெள்ளை அறிக்கைக்கு மாறாகத் தனியார்மயமாக்கும் உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.தொழிற்தகராறு சட்டத்திற்கு முரணாகஉள்ள இந்தத் தனியார் முறை மூலமாக ‘டேபிள் ரீடிங்’ போடுவதற்கும், முறைகேடுகள் நடைபெறுவதற்கும் வாய்ப்புள்ளதுடன் வாரியத்தின் வருவாயும் குறையும். இதனால் பல லட்சம்இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாவதுடன் இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதியும் பறிக்கப்படும் என்பதால், இந்த உத்தரவை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
