தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிஐடியு நிர்மல் பள்ளியில் 96% தேர்ச்சி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு

21 May 2026, 1:45 am
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிஐடியு நிர்மல் பள்ளியில் 96% தேர்ச்சி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு
<p><strong>பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிஐடியு நிர்மல் பள்ளியில் 96% தேர்ச்சி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு</strong></p><p>சென்னை, மே 20 - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளியில் 96 விழுக் காட்டினர் தேர்ச்சி பெற்றனர். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதனன்று (மே 20) வெளியானது. சென்னை அயனாவரத்தில் சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளியில் 12 பேர் மாண வர்களும், 11 மாணவிகளும், மொத்தம் 23 பேர் தேர்வு எழுதினர். இதில் 22 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் டி.காட்வின் 486/500 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். எஸ். சந்தோஷ் குமார் 432 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும் மாணவி பி.இனியா 426 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்த னர். இப்பள்ளியின் செய லாளர் அ.சவுந்தரராசன் பணி யாற்றிய தலைமை ஆசிரி யர் இ.டயானா ஜூலியட், ஆசிரியர்கள் டி.ஜெயா மெர்சி, எஸ்.தீனதயாளன், எஸ்.ரகுபதி, ஜெ.சாம்சன் ராஜ், ஆர்.ராஜகுரு, கே. ஷீலா ராணி, கல்விக் குழுவை சேர்ந்த கே.பூபா லன், ஆர்.பெருமாள் சாமி, என்.நாராயணன், வி.டில்லி பாபு மற்றும் டி.எஸ்.உஷா, ஏ.புலிதேவன் உள்ளிட்டோ ருக்கு வாழ்த்து தெரிவித் தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.