ஒன்றிய அரசை கண்டித்து ஆகஸ்ட் 10 மறியல் போராட்டத்திற்கு சிஐடியு அழைப்பு
3 Jun 2026, 12:33 am
<p><strong>ஒன்றிய அரசை கண்டித்து ஆகஸ்ட் 10 மறியல் போராட்டத்திற்கு சிஐடியு அழைப்பு</strong></p><p>திருவள்ளூர், ஜூன் 2- ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கைவிட வலி யுறுத்தி, ஆகஸ்ட் 10 அன்று நாடு முழு வதும் நடைபெறும் மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என சிஐடியு மாநில துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி வலி யுறுத்தியுள்ளார். சிஐடியு அமைப்பின் 56-ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட் டம் சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டுச் சாலையில் திங்களன்று (ஜூன் 1) சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் எம்.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். சிறப்புரையாற்றிய மாநில துணைத் தலை வர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, “ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோதச் சட்டங்களைக் கொண்டு வருவதோடு, தற்போதுள்ள சட்டங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்றி வரு கிறது. இனி வரும் காலங்களில் அனைத்துப் பணிகளையும் ஒப்பந்தப் பணிகளாக மாற்ற முற்படும் இந்த அரசை எதிர்த்து, ஆகஸ்ட் 10-ல் நடைபெறும் நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் தொழிலாளர்களைப் பெருந் திரளாக பங்கேற்கச் செய்வதற்கான பணி களை இப்போதே தொடங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செய லாளர் ஏ.ஜி.சந்தானம், மாவட்டப் பொரு ளாளர் என்.நித்தியானந்தம், மாவட்ட துணைத் தலைவர் ஜி.வினாயகமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இ.வேலன், எஸ்.நரேஷ்குமார் ஆகியோர் உரையாற்றி னர்.</p>
