பணி நிரந்தரம் உள்ளிட்ட அடிப்படை கோரிக்களை வலியுறுத்தி
8 Oct 2026, 3:09 am
<p>பணி நிரந்தரம் உள்ளிட்ட அடிப்படை கோரிக்களை வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்ஒருபகுதியாக புதனன்று நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டப் பொருளாளர் கு.சிவராஜ், சிஐடியு மாவட்ட உதவிச்செயலாளர் சு.சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
