குமரி மாவட்ட தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டுக் கோரி சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்
23 Mar 2026, 3:39 pm
<p><strong>குமரி மாவட்ட தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டுக் கோரி சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>நாகர்கோவில்.மார்ச் 23- ஈரான் மற்றும் வளை குடா நாடுகளில் சிக்கித் தவிக் கும் குமரி மாவட்ட மீன்பிடி, கட்டுமானம் உட்பட அனை த்து தொழிலாளர்களையும், மாணவர்களையும் பாது காப்பாக அழைத்து வர உட னடி ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தி ற்கு சிஐடியு மாவட்ட தலை வர் ஏ.வி .பெல்லார்மின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ். சி. ஸ்டாலின் தாஸ்.மாவட்ட பொருளாளர் ப. இந்திரா, மாநில நிர்வாகிகள் எஸ். அந்தோணி, கே தங்க மோ கனன், எம் .ஐடா ஹெலன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து விதொச மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி, தலைவர் என் எஸ் கண்ணன், வி ச மாவட்ட செயலாளர் ரவி பேசினர்.</p>
