தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கிடுக! சிஐடியு உடலுழைப்பு தொழிலாளர் சங்க பேரவை கோரிக்கை

24 May 2026, 10:58 pm
மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கிடுக! சிஐடியு உடலுழைப்பு தொழிலாளர் சங்க பேரவை கோரிக்கை

மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கிடுக! சிஐடியு உடலுழைப்பு தொழிலாளர் சங்க பேரவை கோரிக்கை

விருதுநகர், மே 24- நலவாரியத்தில் பதிவு செய்த அனைவ ருக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். சாலை யோர வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். நலவாரிய பணப்பலன் களை இரட்டிப்பாக்க வேண்டும் என சிஐ டியு-உடலுழைப்பு தொழிலாளர்கள் சங்க மாவட்ட ஆண்டுப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகரில் தோழர் என்.வி. நினை வரங்கில் நடைபெற்ற நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் வி.சந்தனம் தலைமை தாங்கி னார். மாவட்ட பொருளாளர் வி.பாலமுரு கன் வரவேற்றார். துவக்கி வைத்து சிஐ டியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.சாராள் பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் எம். மகாலெட்சுமி வேலை அறிக்கை சமர்ப்பித் தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா சிறப்புரையாற்றினார். புதிய நிர்வா கிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்டத் தலை வராக வி.சந்தனம், பொதுச் செயலாளராக எம்.மகாலெட்சுமி, பொருளாளராக வி.பால முருகன், துணைத் தலைவர்களாக எம்.பிச்சைக்கனி, பாண்டியன், வைரப்பிரகாசம், இணைச் செயலாளர்களாக சி.ஜெயக் குமார், சி.முருகன், உஷா ஆகியோர் உட்பட 22 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.