தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெள்ளை அறிக்கை மாற்றுத் தீர்வுகளைக் கூறவில்லை போக்குவரத்துக் கழகங்களின் உண்மை நிலையை விளக்கி நிதியமைச்சருக்கு சிஐடியு கடிதம்!

20 Jun 2026, 11:07 pm
வெள்ளை அறிக்கை மாற்றுத் தீர்வுகளைக் கூறவில்லை  போக்குவரத்துக் கழகங்களின் உண்மை நிலையை விளக்கி நிதியமைச்சருக்கு சிஐடியு கடிதம்!

வெள்ளை அறிக்கை மாற்றுத் தீர்வுகளைக் கூறவில்லை போக்குவரத்துக் கழகங்களின் உண்மை நிலையை விளக்கி நிதியமைச்சருக்கு சிஐடியு கடிதம்!

சென்னை, ஜூன் 20- தமிழக வெற்றிக் கழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, மாற்றுத் தீர்வுகளைப் பற்றிப் பேசவில்லை என்றும், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைத் துறை களின் செலவினங்களை அரசுக்குச் சுமை யாகச் சித்தரிப்பது சரியல்ல என்றும் சிஐடியு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் பொ துச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் ஆகியோர் தமிழக நிதியமைச்சருக்கு அனுப்பியுள்ள விரி வான கடிதத்தில், போக்குவரத்துக் கழகங்களின் உண்மை நிலை குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளனர். அக்கடிதத்தின் தொகுப்பு வருமாறு:

சேவைத் துறைகளைச் சுமையாகப் பார்ப்பது சரியல்ல

தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை பற்றி மக்கள் தெரிந்துகொள்ளும் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டது சரியானது என்றாலும், அது மாற்றுத் தீர்வுகளைப் பற்றிப் பேசாதது ஏமாற்றமளிக்கிறது. மின்சார வாரி யம், போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக்கழகம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றின் கடனை அரசின் பொறுப்பாகக் குறிப்பிட்டிருப்பது மிகச்சரியானது. ஏனெனில், இவை மக்களின் வாழ்வாதாரத்தோடும் தமிழ கத்தின் வளர்ச்சியோடும் பிணைக்கப்பட்டவை. ஆனால், இத்துறைகளின் சேவைகள் அரசுக்குச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது ஏற்பு டையதல்ல. கல்வி, சுகாதாரம் போன்றே பொ துப்போக்குவரத்தும் தவிர்க்க முடியாத அத்தி யாவசியக் கட்டமைப்பாகும். இதில் ஏற்படும் செலவைச் சுமையாகப் பார்ப்பது, ‘ஒரு மனிதர் அன்றாடம் உணவு உட்கொள்வதற்குச் செலவாகி றதே என வருத்தப்படுவதற்கு’ ஒப்பானதாகும். எனவே, அரசு இத்துறைகளுக்குக் கூடுதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

டீசல் செலவு ஒப்பீடும் தவறான புள்ளிவிவரங்களும்

வெள்ளை அறிக்கையில் போக்குவரத்துத் துறை சம்பந்தமாகக் கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் தவறான அடிப்படையில் உள்ளன. கடந்த 2020-21 ஆம் ஆண்டுகள் கொரோனா பேரிடர் காலமாகும். பெரும்பாலான பேருந்து கள் இயக்கப்படாத அந்த உறைந்த காலத்தில் டீசல் செலவு ரூ.1,962 கோடியாக மட்டுமே இருந்தது. அதனை 2025-26 ஆம் ஆண்டின் டீசல் செலவான ரூ.5,598 கோடியுடன் ஒப்பிட்டு, செலவு 185 சதவீதம் உயர்ந்துவிட்டது என்று கூறுவது எவ்விதத்திலும் பொருத்தமற்றது. தமிழக போக்குவரத்துக் கழகத் தொழி லாளர்கள் மிக அதிக திறனுடன் செயல்பட்டு எரிபொருள் செலவைக் குறைத்துள்ளனர். வெள்ளை அறிக்கையில் ஒப்பிடப்பட்டுள்ள மகா ராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மாநில போக்கு வரத்துக் கழகங்களைவிட, நமது கழகங்கள் 1 லிட்டர் டீசலுக்கு இயக்கும் கிலோ மீட்டர் தூரம் அதிகமாகும். இதற்காகப் பல்வேறு தேசிய விருதுகளையும் தமிழக போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுள்ளன.

மகளிர் கட்டணமில்லா பயணம்: குறைந்துவிட்டதா பேருந்து வருவாய்?

பேருந்து வருவாய் (கலெக்சன்) 2019-20 இல் ரூ.8,827 கோடியாக இருந்தது, 2025-26 இல் ரூ.7,646 கோடியாகக் குறைந்துவிட்டது எனக் கூறப்பட்டுள்ளது சரியற்றது. 2021 மே மாதம் முதல் மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன் மகளிர் பணம் கொடுத்துப் பயணம் செய்தனர். இப்போது அந்தப் பணத்தை அரசு போக்கு வரத்துக் கழகங்களுக்கு பட்ஜெட் மூலம் ஈடுசெய்து (Reimbursement) வழங்குகிறது. சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக அரசு வழங்கிய தொகை ரூ.3,500 கோடியாகும். இதையும் சேர்த்தால் உண்மையான வருவாய் ரூ.11,100 கோடியாகும். எனவே வருவாய் குறையவில்லை. அரசு வழங்க வேண்டிய தொகையை ஏதோ ‘மானியமாக’ அல்லது ‘இலவசமாக’ வழங்கியது போல் சித்தரிப்பது சரியற்றது. நீண்டகாலமாக நிதித்துறையில் உள்ள சில அதிகாரிகள் இத்தகைய தவறான சித்தரிப்புகள் மூலம் போக்குவரத்து கழகங்க ளைச் சிறுமைப்படுத்தி வருகின்றனர்.

போக்குவரத்துக் கழகங்களின் நிதியிழப்புக்கு உண்மையான காரணம் என்ன?

Hசேவை நோக்கம்: போக்குவரத்துக் கழகங்கள் லாப நோக்கமின்றிச் சேவைத்துறையாகவே செயல்பட்டு வருகின்றன. நிதியிழப்பு ஏற்படும் என்று தெரிந்தே, தமிழகத்தின் கடைகோடி கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் 10,000-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Hஉலக சாதனை: உலகிலேயே ஒரு நாளில் ஒரு பேருந்தில் அதிக பயணிகள் பயணம் செய்வது சென்னை மாநகர போக்குவரத்துக் கழக (MTC) பேருந்துகளில்தான்.

Hவரவு - செலவு வித்தியாசம்: அதிகப் பயணிகள் பயணம் செய்தாலும், அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கட்டணத்தின் காரணமாக 1 கிலோ மீட்டருக்கான வருவாயை விடச் செலவு அதிகமாக உள்ளது.

Hஅரசாணையும் நிலுவைத் தொகையும்: இந்த வரவு - செலவு வித்தியாசத் தொகை யை அரசு வழங்க வேண்டும் என 15 ஆண் டுக்காலப் போராட்டத்திற்குப் பின் 2022 இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் படி, 2022 முதல் இதுவரை அரசு வழங்க வேண்டிய தொகை சுமார் ரூ.20,000 கோடியாகும். ஆனால், அரசு வழங்கியதோ வெறும் ரூ.2,646 கோடி மட்டுமே. அரசு உரிய தொகையை வழங்காததால், வங்கிகளில் கடன் பெற்றுப் போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, வசூலாகும் ஒவ்வொரு 100 ரூபா யிலும் 13 ரூபாய் வட்டியாகவே கட்டப்படுகிறது. போக்குவரத்துக் கழகங்களுக்கு உள்ள மொத்தக் கடன் ரூ.43,865 கோடியில், சுமார் ரூ.10,000 கோடி தொழிலாளர்களின் வருங் கால வைப்புநிதி, பணிக்கொடை உள்ளிட்டவைக ளுக்குச் செலுத்த வேண்டிய தொகையாகும். இந்த உண்மைகளை ஆய்வு செய்யாமல் வெள்ளை அறிக்கையில் கூறியிருப்பது நியாய மற்றது.

செலவு அல்ல; சமூக முதலீடு: சிஐடியு காட்டும் மாற்றுப்பாதை

போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்கும் பணம் வெறும் ‘செலவு’ அல்ல; அது ஒரு மகத்தான ‘சமூக முதலீடு’ ஆகும். பொ துப்போக்குவரத்தில் 1 சதவீதம் முதலீடு செய்தால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4 சதவீதம் அதிகமாகும் என்றும், சுகாதா ரச் செலவு 7 சதவீதம் குறையும் என்றும் உலக பொருளாதார ஆய்வு மையம் தெளிவுபடுத்தி யுள்ளது. காற்று மாசுபடுதல், புவி வெப்பமய மாதல், விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தப் பொதுப்போக்கு வரத்தை வலுப்படுத்துவதே ஒரே தீர்வாகும். எனவே, இந்த உன்னதக் கண்ணோட் டத்துடன் போக்குவரத்துக் கழகங்களை அரசு அணுக வேண்டும். உரிய காலத்தில் புதிய பேருந்துகளை மாற்றுவது, போதுமான பணியாளர்களை நியமிப்பது, ஊழலைத் தடுப்பது, உதிரிப்பாகங்கள் கொள்முதலில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவது மற்றும் தனியாருக்குச் சாதகமாக நேரங்களை விட்டுக்கொடுக்கும் முறைகேடுகளை ஒடுக்குவது போன்றவற்றிற்கு அரசு முன்னுரிமை தர வேண்டும். மின்சாரப் பேருந்துகளை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்வது என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. போக்குவரத்துக் கழகங்களுக்குச் செய்யப் படும் செலவுகளை நீண்டகால சமூக முதலீடாகப் பார்த்து, பொதுப்போக்குவரத்து கட்டமைப்பை அரசு வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இக்கடிதத்தின் நகல்கள் போக்குவரத்து துறை அமைச்சர், நிதித்துறைச் செயலாளர், போக்குவரத்து துறைச் செயலாளர் மற்றும் சிபிஐ(எம்) சட்டமன்றக் குழுத் தலைவர் ஆர். செல்லசுவாமி ஆகியோருக்கும் அனுப்பப் பட்டுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.