தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நீடித்த தொடர் போராட்டம் முறைசாரா சங்க வெள்ளி விழா நிகழ்வில் அ.சவுந்தரராசன் அறைகூவல்
5 hours before
<p><strong>தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நீடித்த தொடர் போராட்டம் முறைசாரா சங்க வெள்ளி விழா நிகழ்வில் அ.சவுந்தரராசன் அறைகூவல்</strong></p><p>சென்னை, ஜூலை 13- தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக நீடித்த தொடர் போராட் டத்தை நடத்த வேண்டு மென்று சிஐடியு அகில இந்திய துணைத் தலை வர் அ.சவுந்தரராசன் அறை கூவல் விடுத்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழி லாளர்கள் சங்கம் தென்சென்னையில் தொடங்கி 25 ஆண்டுகளா கிறது. இதனையொட்டி சங்கத்தின் வெள்ளிவிழா ஞாயிறன்று (ஜூலை 12) சைதாப்பேட்டையில் நடை பெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய அவர், “முறைசாரா தொழி லாளர்கள் என்றால் சட்டம் பொருந்தாத தொழி லாளர்கள் என்று பொருள். தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் சட்டம் பொருந்தாது என்கின்ற னர். எந்தவிதமான சட்டச் சலுகையும், சமூக பாது காப்பும் இல்லாத தொழி லாளர்களாக முறைசாரா தொழிலாளர்களாக உள்ள னர். சென்னை மாநக ரம் முழுவதும் பல்லா யிரக்கணக்கான தொழி லாளர்கள் உள்ளனர். வீதி வீதியாக சென்று அவர்களை சங்கமாக்கி அணிதிரட்ட வேண்டும். நலவாரிய பணப்பயன், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னை மாவட்டக்குழுக்கள் நீடித்த தொடர் போராட்டத்தை நடத்த வேண்டும்” என்றார். பாராட்டு இந்நிகழ்வில் முறை சாரா சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் க.அழகு, எம்.பி.அன்புமுத்து, எஸ்.ஜெயபிரகாசன், எம்.குமார், வி.தாமஸ், வி.செந்தில்குமார், ஏ.வேலு, ஆர்.துளசி, கே.மோகன்ஜி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி அ.சவுந்த ரராசன் கவுரவித்தார். மேலும், அதிக உறுப்பினர் களை சேர்த்த பகுதிக் குழுக்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார். பகுதி யளவில் பணியாற்றும் முன்னணி ஊழியர்களையும் பாராட்டி கவுரவித்தார். பரிசு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 20 ஆயிரம் ரூபாயை பரிசாக அ.சவுந்தரராசன் வழங்கி னார். நிர்மல் பள்ளி நிதி முறைசாரா சங்கத்தின் சார்பில் ரூ. 5 ஆயிரம் நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக சவுந்தரராசனிடம் வழங்கப்பட்டது. சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.ஏ.லதா தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.அப்பனு, மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.விஜயா, முறை சாரா சங்க மாவட்ட பொதுச்செயலாளர் யு.அணில் குமார் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ஜோசப் நன்றி கூறி னார். முன்னதாக மாவட்ட பொருளாளர் என்.ரவிச் சந்திரன் வரவேற்றார்.</p>
