தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கம் முடிவு

10 Mar 2026, 3:51 pm
வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கம் முடிவு
<p><strong>வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கம் முடிவு</strong></p> <p>மேட்டுப்பாளையம், மார்ச் 10- வீட்டுமனை கேட்டு பல ஆண்டுகளாக போராடும் எளிய உழைப்பாளி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்த சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் அண்மையில் நடைபெற் றது. சங்கத் தலைவர் எம்.எச். சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் பி.சத்யா ஆகியோர் பங்கேற்றனர். இதில், பல ஆண்டுகளாக வீட்டு மனைக்காக காத்திருக்கும் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு உடனடியாக நிலம் வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவது, பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், பில்லூர் அணையை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறினால் நீதிமன்றத்தை அணுகவும், போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் &ndash; கோவை மெமோ ரயிலில் நிலவும் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து மேட்டுப்பாளையம் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்துவது, &nbsp;மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் பள்ளி மாணவர்கள் கூடும் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தி மக்கள் திரள் போராட்டங்கள் நடத்துவது, மேட்டுப்பாளையத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை மீண்டும் அங்கேயே திறக்க அரசை வலியுறுத்துவது. வனத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட &rsquo;வேழம் இயலியல் பூங்கா&rsquo;வை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உடனடியாக திறக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. &nbsp;மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணியின் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்றுவது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.