முந்தய பக்கம்

குலசேகரத்தில் சிஐடியு அமைப்பு தினம் - தோழர் பி.பெருமாள் நினைவு தின கருத்தரங்கம்

31 May 2026, 8:33 pm
குலசேகரத்தில் சிஐடியு அமைப்பு தினம் - தோழர் பி.பெருமாள் நினைவு தின கருத்தரங்கம்
<p><strong>குலசேகரத்தில் சிஐடியு அமைப்பு தினம் - தோழர் பி.பெருமாள் நினைவு தின கருத்தரங்கம் </strong></p><p>குலசேகரம், மே 31- சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் தோழர் பி. பெருமாள் அவர்களின் 25 ஆவது நினைவு தினம் மற்றும் சிஐடியு அமைப்பு தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் குலசேகரத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் பல்வேறு சுரண்டலுக்கு உள்ளாகிய தோட்டத் தொழிலாளர்களுக்காக போராட்டங்களை நடத்தி உரிமைகளை வென்றெடுத்தவர். தோட்டத் தொழிலாளர்கள், மலையோரம் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கின்ற வன விலங்குகளிடமிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு இயக்கங்களை நடத்தியவர் தோழர் பி.பெருமாள் ஆவார். அவரது நினைவு தினம் மற்றும் சிஐடியு அமைப்பு தின கருத்தரங்கம் சிஐடியு மாவட்டத் தலைவர் ஏ.வி. பெல்லார்மின் தலைமை தாங்கினார். தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் பி. நடராஜன் வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், எம்.அண்ணாதுரை ஆகியோர் உரையாற்றி னர். சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் கருத்துரையாற்றினார். கருத்தரங்கில் பெண் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram