மே-30 சிஐடியு அமைப்புதினம் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்! - வி.குமார்
28 May 2026, 9:57 pm

மே-30 சிஐடியு அமைப்புதினம் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்! - வி.குமார்

தொழிலாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்தாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடி யாது என்ற தெளிவான பார்வையோடு 1920-இல் ஏஐடியுசி (AITUC) தொடங்கப்பட்டது. அதற்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு, 1970 மே 30-இல் சிஐடியு (CITU) உதயமானது. அது துவங்கியதிலிருந்து கடந்த 56 ஆண்டுகளாக “ஒன்றுபடுவோம், போராடி முன்னேறு வோம்” என்பதே சிஐடியு-வின் தாரக மந்திரமாக அமைந் துள்ளது. தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்குதல்களும், உழைப்பாளி மக்களின் ஒற்றுமை யைச் சீர்குலைக்கும் மதவாத - சாதிய முயற்சிகளும் புதிய சவால்களாக எழுந்துள்ள நேரமிது. இத்தாக்குத லுக்கு எதிராகப் போராட்ட ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் சிஐடியு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தொழிலாளி வர்க்கத்தின் நலன்க ளுக்காக வாதாடும் முன்னணிப் படை என்ற பெயரைச் சிஐடியு வென்றெடுத்தது.

சோசலிசம் என்ற குறிக்கோளையும் வர்க்கப் போராட் டத்தையும் சிஐடியு தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வந்த துடன், இவ்வுயரிய குறிக்கோள்களுக்கு விரோதமான அனைத்துத் தத்துவங்களையும் அது எதிர்த்துப் போரா டியும் வந்துள்ளது. சில நேரங்களில், சில குறிப்பிட்ட நிலைப்பாடுகளை எடுக்கும்போது அது தனித்து நின்ற போதிலும்கூட, தொழிலாளர்களின் வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை அது எப்போதும் கைவிட்டதேயில்லை. துவக்க மாநாட்டிலேயே சிஐடியு ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கத்திற்கு மிகுந்த முக்கி யத்துவம் அளித்தது.

வரலாற்றுப் பின்னணி

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய தேசிய காங்கி ரஸ் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அவர்கள் நிலப் பிரபுத்துவத்தை ஒழிக்காமல், முதலாளித்துவத்தைக் கட்டுகிற பாதையைப் பின்பற்றினார்கள். இதுவே முத லாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசாங்கத்தின் வர்க்கக் கொள்கையாக இருந்தது. இயல்பாகவே இக்கொள்கை உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்கு விரோதமாக அமைந்தது. எங்கெல்லாம் தொழிலாளி வர்க்கம் எழுச்சி பெறமுயன்றதோ, அங்கெல்லாம் அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முயற்சி செய்தது.

1960-களில், பொருளாதார நெருக்கடியின் பின்னணி யில் கதவடைப்புகள், வேலையின்மை, ஒப்பந்த முறை அதிகரிப்பு, கூட்டுப் பேர உரிமை மீது தாக்குதல், போனஸ் மற்றும் சமூகப் பாதுகாப்புச் சலுகைகள் மறுப்பு உள்ளிட்ட வடிவங்களில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்க ணக்கான ஜவுளி, சணல், தோட்ட, ஸ்டீல் மற்றும் போக்கு வரத்துத் தொழிலாளர்கள், ஒன்றிய-மாநில அரசு ஊழி யர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் அலை அலையான போராட்டங்கள் 1965-70 காலகட்டங்களில் நடைபெற்றன.

தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் மீது, குறிப்பாக உழைப்பாளி வர்க்க நலன்க ளில் சமரசம் செய்துகொள்ள மறுத்த, வர்க்கச் சமரசப் பாதையை எதிர்த்தவர்கள் மீது அரசாங்கம் தாக்குதல் தொடுத்தது. வர்க்க ஒற்றுமை மற்றும் வர்க்கப் போராட்டப் பாதையில் உறுதியோடு இருந்த தலைவர்க ளின் தலைமையில் பெரும் எண்ணிக்கையிலான போ ராட்டங்கள் நடைபெற்ற மேற்குவங்கத்தில் இத்தாக்குதல் கள் கடுமையாக நடந்தன. அனைத்துத் துறைகளிலும் இருந்த தொழிலாளர்களை இத்தாக்குதல்களுக்கு எதிரா கவும், சுரண்டல் கொள்கையுடைய ஆட்சிக்கு எதிராகவும் ஒரு பொதுவான ஒருமித்த போராட்டத்தில் ஒன்றுதிரட்டு வது அந்தக் காலகட்டத்தின் தேவையாக இருந்தது.

வர்க்கச் சமரசப் பாதையிலிருந்தும், ஆளும்கட்சி யுடன் சமரசம் செய்துகொள்வதிலிருந்தும் மாற்றம் காண பத்தாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததற்குப் பின்னரே, அர சாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டப் பாதையில் நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தை எடுத்துச் செல்ல ஒரு புதிய தொழிற்சங்க மையம் உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் 9-10 தேதிகளில் கோவாவில் கருத்த ரங்கம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்திற்கு ஏற்ப, முதலாவது அகில இந்திய மாநாடு கல்கத்தாவில் 1970 மே 27 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மாநாட்டில் மே 30-அன்று தலைவராக தோழர் பி.டி.ரணதிவே அவர்களையும், பொதுச்செய லாளராக தோழர் பி.ராமமூர்த்தி அவர்களையும் கொண்டு சிஐடியு உருவானதை அறிவிக்கும் தீர்மா னம் மகிழ்ச்சியும் உத்வேகமும் நிறைந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஒரு புதிய புரட்சிகரமான தொழிற் சங்கத்தின் அடிக்கல் நாட்டப்பட்டதைக் கொண்டாடும் வகையில் மே 31 அன்று பிரிகேட் பரேட் மைதானத்தில் பிரம்மாண்டமான பேரணி நடத்தப்பட்டது.

ஒன்றுபட்ட போராட்டப் பாதை

சிஐடியு-வை தனிமைப்படுத்த அப்போதைய தொழி லாளர் நலத்துறை அமைச்சர் ஆர்.கே.கதில்கர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஐஎன்டியுசி உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்று தொழிற்சங்கங்களுக்கான தேசிய கவுன் சிலை (NCTU) உருவாக்கினர். இந்த அமைப்பு காங்கிரஸ் அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத கொள்கைகளு க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.

இதற்கு மாறாக, உழைப்பாளி வர்க்கத்தைப் பாது காப்பதற்காக யுடியுசி, யுடியுசி (எல்.எஸ்) ஆகிய மத்திய தொழிற்சங்கங்களையும், ஜார்ஜ் பெர்னாண்டஸ் வழிநடத்திய எச்.எம்.கே.பி மற்றும் தொழில்வாரி சம்மே ளனங்கள், அரசு ஊழியர்கள், இதர பிரிவினர் என அனை த்துப் பகுதியினரையும் ஒன்றிணைத்து “தொழிற்சங் கங்களுக்கான ஒன்றுபட்ட கவுன்சிலை” (UCTU) சிஐடியு உருவாக்கியது. இந்த அமைப்பு தொழிலாளி வர்க்கப் பிரச்சனைகள் மீது கூட்டு இயக்கங்களை நடத்தி, தாக்கு தல்களை வலிமையோடு எதிர்த்தது. சிஐடியு துவங் கப்பட்ட உடனேயே துர்காபூர் உருக்காலையிலும், அலாய் உருக்காலையிலும் தொழிலாளர்கள் கடும் தாக்குதல்களை எதிர்கொண்டும், மிகப்பெரும் தியா கங்களைச் செய்தும் நீண்டகாலப் போராட்டம் நடத்தி னார்கள். அவர்களுக்காகச் சிஐடியு நாடு முழுவதும் ஆதரவு இயக்கம் நடத்தியது.

ரயில்வே வேலைநிறுத்தம் முதல் நவீன தாராளமயம் வரை

1974-ஆம் ஆண்டில் நடைபெற்ற ரயில்வே தொழி லாளர்களின் வீரம் செறிந்த வேலைநிறுத்தம் நாட்டின் ஒட்டுமொத்த உழைப்பாளி வர்க்கத்திற்கும் தூண்டுகோ லாக அமைந்தது. பழிவாங்குதல்களைத் துணிச்சலோடு எதிர்கொண்ட இருபது நாட்கள் வேலைநிறுத்தம், இன் றைக்கும் உத்வேகமளிக்கக் கூடிய சக்தியாக உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் ஐஎன்டியுசி தவிர அனைத்துப் பிரதான மத்திய தொழிற்சங்கங்களும் பங்கேற்கச் சிஐடியு முன்முயற்சி எடுத்து, முன்னணி அமைப்பாக நின்றது.

தொடர்ந்து, இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை ஆட்சியை உறுதியோடு எதிர்த்துப் போராடியது. போனஸ் அளவை 8.33 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைத்த போது அதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது. 1978-இல் ஜனதா அரசு புதிய தொழிலுறவுக் கொள்கை மசோதாவைக் கொண்டுவந்தபோது, அதற்கு எதிராக சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, பிஎம்எஸ் உள்ளிட்ட அமைப்புகளை உள்ளடக்கிய “தேசியப் பிரச்சாரக் குழு” உருவாக்கப்பட்டு, மசோதா தூக்கியெறியப்பட்டது. பெங்களூர் பொதுத்துறைத் தொ ழிலாளர்களின் வீரம் செறிந்த 80 நாள் வேலை நிறுத்த மும் இவ்வொற்றுமையை மேலும் பலப்படுத்தியது.

1982 ஜனவரி 19 அன்று இந்திரா காந்தி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, மும்பை சிறப்பு மாநாட்டின் தொடர்ச்சியாக தில்லியில் பல லட்சம் பேர் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டு, வேலைநிறுத்த அறை கூவல் விடுக்கப்பட்டது. கொடூரமான அடக்குமுறைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் இறந்தபோதிலும், அவ்வேலைநிறுத்தம் மிகப்பெரும் வெற்றி பெற்று வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்தியது.

இந்தியாவில் புதிய தாராளமயச் சீர்திருத்தங்கள் துவங்கியது முதலே, ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக் கத்தையும் கூட்டுப் போராட்டங்களில் ஒன்றுபடுத்தச் சிஐடியு முன்முயற்சி எடுத்தது. புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து 1991 நவம்பர் 29-இல் நடை பெற்ற நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம், தாராள மயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய கொள்கைக ளுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டங்களின் புதிய அத்தியாயத்தைத் திறந்துவைத்தது.

தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையினால் இது வரை 23 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டுத் தேசத்தின் சொத்துக்களும் மக்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனர். 2017 நவம்பரில் நடைபெற்ற 3 நாட்கள் தொழிற்சங்க கூட்டு மேடையின் “மகாபாதவ்” போராட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். சமீபத்தில் அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவு ஊழியர்களின் போராட்டங்கள் பல மாநி லங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தன. தமிழ கத்தில் சங்கம் அமைப்பதற்காகச் சாம்சங் தொழிலா ளர்கள் நடத்திய 38 நாட்கள் வேலைநிறுத்தப் போராட் டம் சிஐடியு செல்வாக்கை உயர்த்தியது. தற்போது ஹரி யானாவின் பானிபட், குருகிராமின் மானேசர், நொய்டா என ஒட்டுமொத்த தேசியத் தலை நகர் பிராந்தியம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத பெரும் தொழி லாளர் எழுச்சி உருவாகியுள்ளது.

சர்வதேச உறவும் அமைப்புச் சட்டக் கடமையும்

உலக தொழிற்சங்க இயக்கத்தில் சிஐடியு-விற்கு உயர்ந்த மரியாதை உள்ளது. நமது சர்வதேச உறவு களை விரிவுபடுத்துவது, நிதி மூலதனத்தால் இயக்கப் படும் ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதிரான போராட் டத்தில் தொழிலாளி வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்து வதன் எடுத்துக்காட்டாகும்.

சிஐடியு தனது அமைப்புச் சட்டத்தில், “உழைக்கும் வர்க்கம் சுரண்டப்படுவதை ஒழிக்க அனைத்து விதமான உற்பத்தி, வினியோகம் மற்றும் பரிவர்த்தனையைச் சமூகமயமாக்குவதும், சோசலிச அரசை நிறுவுவதன் மூலமே முடியும்” என்று பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த குறிக்கோளை வென்றெடுப்பதற்கான முதல் நடவ டிக்கை இன்றைய பெருமுதலாளித்துவ-நிலப்பிர புத்துவ அரசை அகற்றி ஒரு மக்கள் ஜனநாயக அரசை ஆட்சியமைப்பதாகும்.

இப்போதிருக்கும் கார்ப்பரேட்-மதவாத கள்ளக் கூட்டணி அரசை அகற்றுவதற்காக ஓய்வின்றி நிரந்தர மாகப் போராடுவதும், விவசாயிகளுடன் கூட்டணி சேர்ந்து ஜனநாயகப் போராட்டங்களை ஒருங்கிணைப்ப தும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக நீடித்த போராட்டத்தை முன்னெடுத்து ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளின் ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவ தும் தான் இன்றைக்கு தொழிற்சங்க இயக்கத்தின் தவிர்க்க இயலாத கடமையாகும். அத்தகைய கடமைகளை நிறைவேற்ற சிஐடியு அமைப்பு தினத்தில் உறுதி யேற்போம்!