மின் விநியோகத்தை தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக! சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நெல்லை திட்ட மாநாடு வலியுறுத்தல்
10 Oct 2026, 10:12 pm

மின் விநியோகத்தை தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக! சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நெல்லை திட்ட மாநாடு வலியுறுத்தல்

திருநெல்வேலி, அக்.10-மின் விநியோகத்தை தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) நெல்லை திட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) 34 ஆவது நெல்லை திட்ட மாநாடு குற்றாலத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

திட்ட இணைச் செயலாளர் பச்சையப்பன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். செல்வி சிவகார்த்திகை குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநாட்டிற்கு திட்டத் தலைவர் நாகையன் தலைமை தாங்கினார். திட்ட துணைத்தலைவர் அயூப்கான் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். திட்ட இணைச் செயலாளர் இளையராஜா வரவேற்று பேசினார். அமைப்பின் மாநில துணைத்தலைவர் சந்திரன் துவக்கவுரையாற்றினார். திட்டச் செயலாளர் கந்தசாமி வேலை அறிக்கையையும், திட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவு–செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

சிஐடியு தென்காசி மாவட்ட செயலாளர் எம்.மணிகண்டன், சிஐடியு நெல்லை மாவட்ட செயலாளர் எல்.சரவண பெருமாள், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.பீர்முகம்மது ஷா, மாநிலத் துணைத் தலைவர் அப்பாதுரை, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் ராமச்சந்திரன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல பொதுச் செயலாளர் ஜோதி,டி.என்.பி.இ.ஒ சங்க மாநிலச் செயலாளர் ஆனந்தம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.மாநிலத் தலைவர் எஸ். கண்ணன் சிறப்புரையாற்றினார். திட்டத் துணைத் தலைவர் பட்டமுத்து நன்றி கூறினார்.

நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திட்டத் தலைவராக எஸ். பூலுடையார், திட்டச் செயலாளராக டி. கந்தசாமி, திட்டப்பொருளாளராக இ. பாலசுப்பிரமணியன் மற்றும் 6 துணைத் தலைவர்கள் உட்பட 21 பேர் கொண்ட கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது.

காலியாகவுள்ள பணியிடங்களை நேரடியாக நிரப்பி மக்கள் சேவையை மேம்படுத்த வேண்டும். பிபிபி (PPP) என்ற முறையில் தனியார்மயத்தை புகுத்துவதை கைவிட வேண்டும். வேலைப்பளு ஒப்பந்தத்திற்கு மாறாக கணக்கீட்டுப் பணிகளை தனியாருக்கு அனுமதித்ததை கைவிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு, வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களை கள

உதவியாளர்களாக பணிமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.