விருதுநகரில் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகம் திறப்பு
21 Dec 2025, 3:21 pm
<p><strong>விருதுநகரில் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகம் திறப்பு</strong></p>
<p>விருதுநகர், டிச. 21- விருதுநகரில் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகம் (தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவகம்) தொழிலாளர்களின் எழுச்சி மிகு முழக்கங்களுடன்ம் ஞாயிறன்று திறக்கப்பட்டது. சிவகாசி சாலை முத்துராமலிங்கம் நகரில் நடைபெற்ற திறப்பு விழாவிற்கு மாவட்டத் தலைவர் எம்.மகாலெட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் வி.ஆர்.செல்லச்சாமி, எம்.கார்மேகம், எம்.சாராள், எம்.திருமலை, எம்.சி.பாண்டியன், ஆர்.பாலசுப்பிரமணியன், கே.விஜயகுமார், ஆர்.முனியாண்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் பி.ராமர் வரவேற்புரை நிகழ்த்தினார். சிஐடியு கொடியை மூத்த தலைவர் ஜி.வேலுச்சாமி ஏற்றி வைத்தார். கல்வெட்டை மாவட்ட உத வித் தலைவர் ஜி.கணேசன் திறந்து வைத் தார். பெயர் பலகையை மாநிக்குழு உறுப்பி னர் எம்.அசோகன் திறந்து வைத்தார். அலுவலகக் கட்டிடத்தை அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் திறந்து வைத்தார். முதல் தளத்தை மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், இரண்டாம் தளத்தை மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் திறந்து வைத்தனர். அமைப்பின் முதல் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.பெருமாள் வாழ்த்துரை வழங்கினார். சிஐடியு அமைப்பை உரு வாக்கி வளர்த்த முன்னோர்களின் திருவுரு வப் படங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூனன், மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். கட்டிட மதிப்பீட்டு அறிக்கையை மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா சமர்ப்பித்தார். சிஐடியு கன்வீனர் வி.பாலமுருகன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரான தாக்குதல் அலுவலகத்தைத் திறந்து வைத்த அகில இந்திய துணைத் தலைவர் அ. சவுந்தர ராசன் பேசுகையில், “போராட்டங்களின் மூலம் பெற்ற தொழிலாளர் சட்டங்களை, பாஜக அரசு 4 தொகுப்புகளாக மாற்றி யுள்ளது. இது தொழிலாளி வர்க்கத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இதை முறியடிக்க தொழிலாளர்கள் ஒன்றி ணைய வேண்டும்” என்றார். மேலும், வேலை நேரத்தை 12–14 மணி நேரமாக உயர்த்தும் முயற்சி, குறைந்தபட்ச கூலி ரூ.26,000 என்ற கோரிக்கையை மறுப்பது போன்றவை கடும் அநீதிகள் என சுட்டிக்காட்டினார். சிஐடியு வளர்ச்சியின் வரலாறு முதல் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.பெருமாள் பேசுகையில், “அடக்கு முறைகள், காவல்துறை தாக்குதல், சிறை தண்டனை ஆகியவற்றை எதிர்த்து சிஐடியு வளர்ந்தது. தோழர்களின் தியாகத்தால் இன்று வலுவான இயக்கமாக உள்ளது. மேலும் பல லட்சம் தொழிலாளர்களை இணைக்க வேண்டும்” என்றார். பாரம்பரிய தொழில்களின் பாதுகாப்பு மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பேசுகையில், “பஞ்சாலை, கைத்தறி, பட்டாசு, தீப்பெட்டி போன்ற பாரம்பரிய தொழில்களை பாதுகாக்க சிஐடியு தொடர்ந்து போராடி வருகிறது. தொழிலாளர் பாதுகாப்பே முதன்மை” என்றார். மைல் கல் மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் கூறுகையில், “இந்த அலுவலகம் விருதுநகர் மாவட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். தொழிலாளர்களின் வலிமையை உயர்த்தும் மையமாக இது விளங்கும்” என்றார். முன்னதாக, மேளதாளங்களுடன் தொழி லாளர்கள் ஊர்வலமாக அலுவலகத்திற்கு வந்தனர். அலுவலகத்திற்கு தேவையான பொருட்களையும் ஊர்வலமாக கொண்டு வந்தது விழாவிற்கு தனிச்சிறப்பு அளித்தது.</p>
